சென்னை விமான முனையங்களில் இடம்பெற்ற அண்ணா - காமராசர் பெயர் நீக்கம் கண்டனத்திற்குரியது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 11, 2021

சென்னை விமான முனையங்களில் இடம்பெற்ற அண்ணா - காமராசர் பெயர் நீக்கம் கண்டனத்திற்குரியது!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

சென்னை விமான முனையங்களில் இடம்பெற்ற அண்ணா - காமராசர் பெயர் நீக்கம் கண்டனத்திற்குரியது என்றும், இதுகுறித்து நாடாளுமன்றத்தில், தமிழக உறுப்பினர்கள்  குரல் எழுப்பவேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சமூகநீதிக்காவலர் மாண்பமை வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது (1989) - முதல மைச்சர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, சென்னை பன்னாட்டு விமான முனையத்திற்கு அண்ணா பெயரும், உள்நாட்டு விமான முனை யத்திற்குக் காமராசர் பெயரும் சூட்டப்பட்டன.

இப்பொழுது மத்திய பா... ஆட்சியில் இரு பெரும்  தலைவர்களின் பெயர்களும்  திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளன. இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களின் உணர் வினைப் புண்படுத்தும் வேலையில் மத்திய பா... ஆட்சி ஈடுபட்டு வருகிறது.

இது மிகவும் கண்டனத்திற்குரியது - உடனடியாக ஏற்கெனவே இருந்து வந்த அரும்பெரும் தலை வர்கள் அண்ணா, காமராசர் பெயர்கள் இடம் பெறவேண்டும்.

இதுகுறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உரத்தக் குரல் எழுப்பி தமிழ்நாட்டு மக்களின் உணர்வினை மதிக்கச் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்.

சென்னை

11.2.2021

No comments:

Post a Comment