கோயில் பார்ப்பனரின் வீட்டுச் சொத்தா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 26, 2021

கோயில் பார்ப்பனரின் வீட்டுச் சொத்தா?

நான் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு இறுதித்தேர்வு எழுதி உள்ளேன்.  24 பிப்ரவரி அன்று தோழிகளுடன் திருவாரூர் பெரிய கோவிலுக்குச் சென்றேன். எனக்கு மத நம்பிக்கை இல்லாததால்  எனது தோழியர் வழிபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அங்கு சிற்பங்களையும் தமிழ்ப் பாடல்கள் கொண்ட கல்வெட்டுகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னை முறைத்துக் கொண்டே கருவறையைவிட்டு  வந்த அர்ச்சகர் ஒருவர் அவராக வந்து திருநீறை என்னிடம் நீட்டினார்..

வேண்டாங்கஎன்றேன்.

ஏன் வேண்டாம்?” என்றார் முறைத்துக்கொண்டே.

இல்ல வேண்டாங்கஎன்றேன்.

ஏன்?” என்றார் மீண்டும் முறைத்துக்கொண்டே.

எனக்கு நம்பிக்கை இல்லைஎன்றேன்.

உண்மையா... இல்லையா..” என்றார் இழுத்த நடையுடன், முறைத்த பார்வையுடன், என்னை கூர்ந்து நோக்கியவாறு.

இல்லைங்கஎன்றேன்.

அப்போ நீங்க ஆலயத்துக்கே வந்திருக்கக் கூடாது, ஏன் வந்தீங்கஎன்றார் வேக வேகமாக.

ஏன் அப்படிப் பேசினார் என்று எனக்கு விளங்கவில்லை. நான் திருநீறு வாங்கும் வரிசையில் கூட நிற்கவில்லை. ஒரு மூலையில் நின்றேன். என்னிடம் வலுக்கட்டாயமாக திருநீறை நீட்டினார்..பின்பு நம் பிக்கை இல்லை என்றால் ஏன் வந்தாய் என்று கேட்டார்!

ஏன் வரக் கூடாது? “ என்றேன்.

எத்தனையோ ஆயிரம் மக்கள் நம்புறாங்க - நீங்க நம்பிக்கை இல்லைன்னு சொல்லுறீங்க -

என்று, நானும் எனது தோழிகளும் அங்கிருந்து செல்லும்  வரை கத்திக்கொண்டே இருந்தார்.

எந்த இடையூறும் யாருக்கும் ஏற்படுத்தாமல் அங்கு இருந்த பாடல்களைப் படித்துக்கொண்டிருந்த ஒரு மாணவியை ஏன் ஆலயத்துக்கு வந்தீங்க என்று கேட்க அந்த கோவில் அர்ச்சகருக்கு என்ன உரிமை உள்ளது?..அது என்ன அவர் கட்டிய கோவிலா? ஆயிரமாயிரம் மக்கள் நம்பினால் எல்லோரும் நம்ப வேண்டும் என்று மிரட்டும் அர்ச்சகரின் பேச்சும், கோவிலுக்குள் ஏன் வந்தாய் என்று கேட்கும் அவரது ஆதிக்கப் போக்கும் ஆரிய  சனாதனக் கொடூரத்தின் மற்றொரு சான்று.

சிதம்பரம் கோவிலில்  பூசையின் செயல்முறைகளைக் கேட்டதற்கு ஒரு பெண்ணை அர்ச்சகர் அறைந்த வன் முறையை பார்த்தோம். இந்த பார்ப்பனப் பேராதிக்கப் போக்கு அகல - கோவில்களிலும் பார்ப்பனர் அல்லா தோர் பெரும் அளவில் அர்ச்சகர்களாக  இடம் பெற வேண்டும்.”

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவியின் கடிதம்தான் மேலே காணப்படுவதாகும்.

இந்துக் கோயிலுக்குள் மற்ற மதத்தவர்கள் வரக் கூடாது என்றனர் - அது ஒரு பக்கம் இருந்துவிட்டுப் போகட்டும்.

நாத்திகராக இருப்பவர்களுக்குக் கோயிலுக்குள் செல்லும் உரிமை தாராளமாக உண்டு.

ஹிந்து மதத்தில் நாத்திகர்களுக்கும் இடமுண்டு என்றுதானே கூறுகிறார்கள்.

சுற்றுலாத்துறை கூட கோயில் கோயிலாக அழைத்துச் செல்லுவதுண்டு. அழைத்துச் செல்லப்படுவோர் எல்லாம் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள், எந்த கொள்கை உள்ளவர்கள் என்பதற்கான சான்றுகளுடன்தான் செல்கிறார்களா?

காஞ்சிபுரம் மச்சேந்திரநாதர் கோயில் அர்ச்சகர் தேவநாதன் எப்படி நடந்து கொண்டான்? கோயிலுக்கு வரும் பெண்களிடம் எப்படி நடந்து கொண்டான்? கர்ப்பக்கிரகத்தை கர்ப்பம் உண்டாக்கும் காரியமாக மாற்றவில்லையா? இத்தகையவர்கள் எல்லாம் அர்ச்ச கராக இருக்க முடியும், ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாதோர் மட்டும் கோயிலுக்குள் செல்லக் கூடாதா?

மேலே அதிகாரப் பீடங்கள் இருப்பதால் பார்ப்பனர் களின் சண்டியர்த்தனம் தலை, கால் புரியாமல் துள்ளு கிறது. துள்ளுகிற மாடு பொதி சுமக்க நேரிடும் என்று எச்சரிக்கிறோம்!

No comments:

Post a Comment