(23-02-2021 தி ஹிந்து ஆங்கில நாளிதழின் தலையங்கத்தின் மொழியாக்கம்)
கடந்த ஒரு மாத காலமாக புதுச்சேரியில் நிலவி வந்த அரசியல் நிலைத்தன்மையின்மை, சட்ட மன்றத்தில் தனது பெரும்பான்மையை மெய்ப்பிக்கத் தவறிய முதல்வர் நாராயணசாமி பதவி விலகலுடன் முடிவுக்கு வந்தது. அவரது ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றே ஒரு சில நாட்களாக தோன்றிய போதிலும், தேர்ந்து எடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறுவதற்கு ஊக்கம் அளிக்கக் கூடாது என்ற அரசமைப்பு சட்ட விதிகளின் எல்லைகளை சுட்டிக் காட்டும் வழியிலேயே அரசியல் நிகழ்வுகள் நடந் தேறி வந்துள்ளன.
அண்மைக் காலம் வரை, 33 உறுப்பினர்கள் கொண்ட புதுவை சட்டமன்றத்தில் 19 உறுப்பினர்களு டன் சவுகரியமான பெரும்பான்மையை நாராயண சாமி பெற்றிருந்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதத் தில் ஒரு காங்கிரஸ் உறுப்பினர் தகுதி இழக்கச் செய்யப்பட்டதனால் கூட, அந்த சூழ்நிலையில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை. ஆனால், கடந்த ஒரு மாதத்தில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் இருந்து 6 உறுப்பினர்கள் விலகினர். அவர்களில் இரண்டு அமைச்சர்களும், சட்டமன்றத்தில் பெரும் பான்மையை மெய்ப்பிக்கும் நிகழ்வுக்கு ஒரு நாள் முன்னதாக பதவி விலகிய ஒரு சில சட்ட மன்ற உறுப்பினர்களும் அடங்குவர். பதவி விலகிய சட்டமன்ற உறுப்பினர்களில் இருவர் பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 26 ஆகக் குறைந்த மாறியதொரு சூழ்நிலையில் அனைத்திந்திய என்.ஆர்.காங்கிரஸ், தனது உறுப்பி னர்களுடன்
அஇஅதிமுக மற்றும் பா.ஜ.க. வைச் சேர்ந்த மொத்த 14 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. சட்டமன்றத் தேர்தல்கள் ஒரு சில வாரங்களில் நடைபெற இருப்பதால், புதுவையில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்து வதையே துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருக்கும் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரைக்க வேண்டும். வேறு வழியில் மேற்கொள்ளப்படும் எந்த வொரு நடவடிக்கையும், சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சித் தாவலின் கொள்கையற்ற தன்மையையே எடுத்துக் காட்டுவதாக இருக்கும்.
நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது, சட்ட எழுத்துக்களைப் பின்பற்றுவது மட்டுமே அல்ல; ஆரோக்கியமான முன்னுதாரணங்களையும், பழக்க வழக்கங்கள் மற்றும் பாரம்பரியத்தைக் கட்டமைப்பது என்பதும் ஆகும். மூன்று பா.ஜ.க. பொறுப்பாளர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக ஜூன் 2017 இல் நியமிக்கப்பட்ட போதே அவற்றுக்கெல்லாம் விடை கொடுத்து அனுப்பப்பட்டுவிட்டது. நியமனம் செய் யப்பட்ட மூன்று பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இறந்து போனபிறகு,
சட்டமன்றத்தின் ஆயுட்காலமே இந்த ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் தேதியுடன் நிறைவ டையக் கூடிய நிலையில், வேறு ஒரு கட்சிப் பொறுப் பாளரை அந்த இடத்தில் நியமனம் செய்வதில் பா.ஜ.க. தாமதம் செய்யவே இல்லை.
அண்மைக் காலமாக நடந்தேறி வரும் நிகழ்வுகள் அனைத்தையும், தனது முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கும் புதுவை யூனி யன் பிரதேசத்தில் கால் பதிப்பதற்காக பா.ஜ.க. மேற் கொண்டு வரும் செயல்பாடுகளின் அடிப்படையில்
பார்க்க வேண்டும். மேலும் நாராயணசாமியின் ஆட்சியை கடந்த ஒரு சில ஆண்டுகளாக பா.ஜ.க. மிகவும் கடுமையாக தாக்கிக் கொண்டு வந்துள்ளது. இந்த ஒரு மாத கால பதவி விலகல் நாடகத்தை, காங்கிரஸ் கட்சி அற்ற இந்தியா என்ற தனது இலட்சியத்தை எட்டுவதற்கான பா.ஜ.க.யின் மிகப் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் பார்க்க வேண்டும். இந்த விளையாட்டை நியாயமானதொரு முறையில் பா.ஜ.க. விளையாடியிருந்தால், அதைப் பற்றி எவர் ஒருவரும் குறை கூறப்போவதில்லை. பிரதமர் நரேந்திர மோடி 2019 ஆம் ஆண்டில் மறு படியும் தேர்ந்தெடுக்கப்பட்ட போது வானொலியில் பேசிய மனதின் குரல் உரையில், சட்டங்களையும், விதிகளையும் தாண்டி,
நமது பாரம்பரியத்தில் மிக அழுத்தமாகப் பதிந்து போயிருக்கும் ஜனநாயகம் என்பதுதான் நமது கலாச்சாரமும் பாரம்பரியமும் ஆகும் என்று கூறியதற்குப் பொருந்தாதாக பா.ஜ.க. மேற்கொள்ளும்
எந்த விதமான எதிர்மறை செயல் பாடும் இருக்கும்.
அண்மையில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களை கட்சி தாவச் செய்ததன் மூலம் பா.ஜ.க. பெறப்போகும் ஆதாயத்தை விட எதிர்கொள்ளப் போகும் இழப்புகளே அதிகமாக இருக்கும்.
நன்றி: தி ஹிந்து 23.02.2021
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment