அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்துக்குஎதிராக 12 மாகாண அரசுகள் வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 11, 2021

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்துக்குஎதிராக 12 மாகாண அரசுகள் வழக்கு

வாஷிங்டன், மார்ச் 11  பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்தது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்துக்கு எதிராக 12 மாகாண அரசுகள் வழக்கு தொடர்ந்துள்ளன.

பன்னாட்டு அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன.

புவிவெப்ப மயமாதலை 2 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் கட்டுப்படுத்து வதற்கான பருநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த 2015-ஆம் ஆண்டு பாரீசில் நடந்த கூட்டத் தின்போது எட்டப்பட்டது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் ஒபாமா ஆட்சியின் கீழ் அமெரிக்கா முதல் நாடாக இணைந்தது.

ஆனால் அதன் பின்னர் ஆட்சி பொறுப்புக்கு வந்த டிரம்ப், இந்த ஒப்பந்தம் வளரும் நாடுகளுக்கு ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டினார்.

இதனை காரணம் காட்டி கடந்த 2017-ஆம் ஆண்டு பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அவர் அறிவித்தார்.

அதனைத்தொடர்ந்து 2019-ஆம் ஆண்டின் இறுதியில் இந்த ஒப்பந் தத்தில் இருந்து அமெரிக்கா முறைப் படி வெளியேறியது.

இந்த நிலையில், அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபரானார்.

அவர் தனது தேர்தல் பிரச்சாரத் தின் போதே, தான் அமெரிக்க அபதிபரா னால் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என உறுதி அளித்தார்.

அதன்படியே  46ஆவது அமெரிக்க அதிபராக பதவியேற்ற முதல்

நாளிலேயே பாரீஸ் பருவ

நிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவதற் கான நிர்வாக உத்தரவில் ஜோ பைடன் கையெழுத் திட்டார்.

அதனைத்தொடர்ந்து கடந்த மாதம் 19-ஆம் தேதி பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா முறைப்படி மீண்டும் இணைந்தது.

இந்தநிலையில் பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்ததன் மூலம் அமெரிக்காவுக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படும் என கூறி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் மீது 12 மாகாண அரசுகள் கூட்டாக வழக்கு தொடர்ந்துள்ளன.

மிசோரி மாகாணத்தில் அட்டர்னி ஜெனரல் ஏரிக் ஸ்மித் தலைமையில் ஆர்கன்சாஸ், அரிசோனா, இண்டி யானா, கன் சாஸ், மென்டோனா, நெப்ராஸ்கா, ஓஹியோ, ஒக்ல ஹோமா, தெற்கு கரோலினா, டென் னிசி மற்றும் உட்டா ஆகிய மாகா ணங்களின் அட்டர்னி ஜெனரல்கள் ஒன்றிணைந்து இந்த வழக்கை தொடர்ந் துள்ளனர்.

இதுகுறித்து மிசோரி அட்டர்னி ஜெனரல் அலுவலகம் வெளியிட் டுள்ள அறிக்கையில் பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணை வதற்கான ஜோ பைடன் நிர்வாகத்தின் உத்தரவு அமெரிக்க பொருளாதாரத் தின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதிக்கும்.

வரவிருக்கும் 10 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான பில்லியன் அல்லது டிரில்லியன் டாலர் சேதத்தை ஏற்படுத்தும்.

இது அமெ ரிக்காவின் ஒவ்வொரு குடும்பத்தையும் பாதிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஜோ பைடன் அமெரிக்க அதிப ராக பதவியேற்ற பிறகு அவரது நிர்வாகத் துக்கு எதிராக மாகாண அரசுகள் தொடர்ந்துள்ள வழக்கு இது வென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment