பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டி தலைவராக தாமஸ் பேச் மீண்டும் தேர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 12, 2021

பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டி தலைவராக தாமஸ் பேச் மீண்டும் தேர்வு

ஜெனீவா, மார்ச் 12, பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டி தலைவராக தாமஸ் பேச் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவ ராக 67 வயதான தாமஸ் பேச் மீண்டும் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜெர்மனியைச் சேர்ந்த வழக்குரைஞரான தாமஸ் பேச் நம்பிக்கை வாக்கெடுப்பில் 93-1 என்ற கணக்கில் அமோக வெற்றி பெற்றார். இணையவழி மூலம் உறுப்பினர்கள் சந்திப்பும், வாக்கெடுப்பும் நடந்தது. அவர் 2025ஆம் ஆண்டு வரை இந்த பதவியில் நீடிப்பார். தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த தாமஸ் பேச், கரோனா கட்டு பாடுகள் இருந்தாலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்ட படி ஜூலை 23ஆம் தேதி தொடங்கும் என்று மீண்டும் உறுதிப்பட கூறினார்.

No comments:

Post a Comment