வாசிங்டன், மார்ச் 12, அமெரிக்க அதிபர் தி ஜோ பைடனின் கரோனா நிவாரண நிதி மசோதா அமெரிக்க செனட்டில் நிறைவேறியது.
உலக அளவில் கரோனா வைர சால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.
அங்கு வைரஸ் தொற்றும் அதனால் நிகழும் மரணங்களும் மட்டுமல்லாமல் வேலை இல்லா திண்டாட்டமும் உச்சத்தில் உள்ளது.
இதுவரை ஒரு கோடிக்கும் அதிக மான அமெரிக் கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.
இதனிடையே டிரம்பைவிட சிறப்பான முறையில் கரோனா வைரஸ் பிரச்சினையைக் கையாளு வேன் என்ற பிரச்சாரத்தின் மூலம் அதிபராக தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்து இருந்தார்.
இந்த சூழலில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக பதவி ஏற்றார்.
இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்க 1.9 லட்சம் கோடி அமெரிக்க டாலர் செலவிடுவதற்கான திட்டத் தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொண்டுவந்தார்.
இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.138 லட்சத்து 811 கோடியாகும். இதற்கான கரோனா நிவாரண மசோதா நீண்ட இழுபறிக்கு பின்னர் செனட் சபையில் நிறைவேற்றப் பட்டது.
1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்த நிவாரண மசோதா குறித்து ஜோ பைடன் கூறுகையில், இந்த மசோதாவால் 85 சதவீத அமெரிக்க குடும்பங்கள் பயன் பெறுவார்கள்.
திட்டத்தின் மூலம் விரைவில் கரோனா தடுப்பூசி உற்பத்திக்கான ஆயத்த பணிகள் முழுவீச்சில் செயல் படுத்தப் படும். இம்மாத இறுதிக்குள் அமெரிக்கர்களுக்கு தலா 1,400 டாலர் (சுமார் ரூ.1 லட்சம்)
வழங்கும் பணி துவங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அதிபர் ஜோ பைடனின் கரோனா நிவாரண நிதி மசோதா அமெரிக்க செனட்டில் நிறைவேறி உள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த சட்ட மசோதாவில் அதிபர் ஜோ பைடன் இன்று கையெழுத்திடுவார் என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment