புதுடில்லி,ஏப். 26 கரோனா பரவல் அதிகரிப்பையும் மீறி நடந்து வரும் அய்.பி.எல். போட்டிகள் குறித்த செய்தி கள் இனி வராது என இந்தி யன் எக்ஸ்பிரஸ் நாளேடு அறிவித்துள்ளது.
நாடெங்கும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி கரோனா பாதிப்பில் இந்தியா முதல் இடத்தில் பல வரலாறு காணாத உச்சங் களை அடைந்து வருகிறது. இதையொட்டி நாடெங்கும் வழிபாட்டுத் தலம், பொழுது போக்கு தலங்கள் உள்ளிட் டவை அனைத்தும் மூடப் பட்டுள்ளன. ஆனால் அய்.பி. எல். கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டுள்ள அறிக்கையில் ”அன்புள்ள வாசகர்களே, இந்தியா கரோனா பரவலில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு தங் கள் உயிருக்குப் போராடி வரு கின்றனர். இந்த கொடுமைக் குப் பன்னாட்டு சுகாதார நலத்துறை எதுவும் தீர்வு அளிக்காத நிலையில் உள் ளது. சுகாதாரத்துறை அமைச் சகம் வெளியிடும் தினசரி பாதிப்படைந்தோர் மற்றும் மரணமடைந்தோர் எண் ணிக்கை அதிர வைக்கிறது.
அதைப் போல் தனியார் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து ஆக்சிஜன் தேவை, உயிர் காக்கும் மருந்துகள் குறித்த வேண்டுகோளும், அதி கரித்து வருகிறது. படுக்கைகள் காலி இல்லாததால் பல மருத் துவமனைகள் புது நோயாளி களை அனுமதிக்க மறுத்து வருகின்றன. நம்மில் பலர் நமது நண்பர்கள் மற்றும் உற வினர்களை கரோனாவால் இழந்திருக்கலாம் அல்லது அவர்கள் உயிருக்குப் போரா டும் நிலையில் இருக்கலாம்.
இந்த துயர சூழலில் கிரிக் கெட் திருவிழா கோலாகல மாக நடந்து வருகிறது. இது வியாபார நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. தற்போது விளையாட்டு ஒரு பிரச்சினை இல்லை. ஆனால் இந்த நேரத் தில் நடத்துவது பிரச் சினை ஆகும். கிரிக்கெட் போட்டி கள் நடத்துவோர் தற்போது நாம் இருக்கும் மோசமான நிலையை உணர வேண்டும்.
எனவே இந்தியன் எக்ஸ் பிரஸ் நாளேட்டின் சண்டே ஸ்டாண்டர்ட் மற்றும் மார் னிங் ஸ்டாண்டர்ட் உள் ளிட்ட அனைத்து பத்திரிகைக ளிலும் நிலைமை சீராகும் வரை அய்.பி.எல். குறித்த செய்திகள் வெளியாகாது.
இது நாட்டின் வாழ்வா சாவா என்னும் பிரச்சினையில் கவனம் செலுத்த எங்களால் முடிந்த சிறு பங்களிப்பாகும். வாசகர்கள் இதைப் புரிந்து கொள்வார்கள் என நம்புகி றோம். நாம் இப்போது ஒரே நாடு ஒரே தீர்வு என்னும் நிலையில் உள்ளோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment