ரூ.1,000 கோடி இழப்பீடு தாருங்கள்: - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 27, 2021

ரூ.1,000 கோடி இழப்பீடு தாருங்கள்:

 சாமியார் ராம்தேவ்மீது இந்திய மருத்துவக் கூட்டமைப்பு அவதூறு வழக்கு

டேராடூன்,மே27- அலோபதி மருத் துவம், மருத்துவர்களுக்கு எதிராக அவதூறான கருத்துகளைப் பேசிய தற்கு நிபந்தனையற்ற மன்னிப்பை அடுத்த 15 நாட்களுக்குள் சாமியார் ராம்தேவ் கேட்காவிட்டால் ரூ.1,000 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று இந்திய மருத்துவக் கூட்டமைப்பு அறிவிக்கை அனுப்பியுள்ளது.

இந்த அறிவிக்கையை உத்தர காண்ட் இந்திய மருத்துவக் கூட் டமைப்பின் செயலாளர் அஜய் கண்ணா, தனது வழக்குரைஞர் நீரஜ் பாண்டே மூலம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் உத்தரகாண்ட் அய்எம்ஏ தனியாக, சாமியார் ராம் தேவுக்கு அறிவிக்கையை அனுப்பியுள் ளது. அதில், “அய்எம்ஏ அமைப்பில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்து வர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் அனைவரையும் அவமானப் படுத்தும் நோக்கில் அலோபதி மருத்துவத்தை ராம்தேவ் அவதூறாக பேசியுள்ளார்.

சாமியார் ராம்தேவ் பேசியது, இந்திய தண்டனைச் சட்டம் 499இன் பிரிவின்படி கிரிமினல் குற்றமாகும். சாமியார் ராம்தேவ் அலோபதி மருத்துவம், மருத்துவர்கள் குறித்துப் பேசியதற்கு அடுத்த 15 நாட்களுக்குள் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கோர வேண்டும். இல்லாவிட்டால், இந்திய மருத்துவக் கூட்டமைப்புக்கு ரூ.1000 கோடி, அதாவது ஒவ்வொரு உறுப்பி னருக்கும் ரூ.50 லட்சம் இழப்பீடு தர வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் கரோனில் கிட் குறித்து அனைத்து விதமான தளங்களிலும் தவறான புரிதலை உண்டாக்கும் வகையில் செய்துவரும் விளம்பரத்தையும் திரும் பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் சாமியார் ராம்தேவ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment