கரோனா ஒழிப்புப்பணியில் தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு குழுவில் பதிவு செய்யலாம் : தமிழக அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 27, 2021

கரோனா ஒழிப்புப்பணியில் தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு குழுவில் பதிவு செய்யலாம் : தமிழக அரசு

 சென்னை,மே27-   “மே.19 அன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் கரோனா பெருந்தொற்று நோய் இரண் டாம் அலை பரவலை தடுக்கும் வகையில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தான கூட்டம் சென்னை தலைமைச் செயலகத் தில் நடைபெற்றது.

மாநில அளவிலான இந்த ஒருங் கிணைப்புக் குழு தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தேசிய சுகாதார இயக்க வளாகத்தில் இயங்கி வரும் கட்டளை மய்யத்தில் (War Room - Unified Command Centre)தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தன்னலம் கருதா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள் <https://ucc.uhcitp.in/ngoregistration> என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்து மக்களுக்கு உதவும் பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாநில அளவிலான ஒருங்கிணைப்புக்குழுவால் <https://www.facebook.com/tnngocoordination/> என்ற முகநூல் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மேலும், 8754491300 என்ற அலைபேசி எண் மூலமாகவும்,  tnngocoordination@gmail.com  என்ற இணையதளம் வாயிலாகவும் மாநில ஒருங்கிணைப்புக் குழுவை தொடர்பு கொள்ளலாம்".

இவ்வாறு தமிழக அரசு செய்திக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment