தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பு
சென்னை,மே27- தாழ்வழுத்த மின்நுகர்வோர் மின்கட் டணம் செலுத்த வரும் ஜூன் 15-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள் ளதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா பரவுதலைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் 31-ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மின் நுகர்வோருக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடு களைக் கருத்தில்கொண்டு, சில முடிவுகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன.
இதன்படி, தாழ்வழுத்த மின் நுகர்வோர் மின் கட் டணம் மற்றும் இதர நிலு வைத்தொகை செலுத்துவ தற்கான கடைசி நாள் இம் மாதம் 10-ஆம் தேதி முதல் வரும் 31-ஆம் தேதி வரை இருக்குமாயின், அத்தொ கையை வரும் ஜூன் 15-ஆம் தேதிக்குள் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாத மின் கட்டணம் செலுத்தாத, உயர் மின்னழுத்த மின் இணைப் புகளுக்கு தாமதக் கட்டணத் துடன் செலுத்தவும்கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது. சிறு மற்றும் குறுந் தொழிற் சாலைகள் மற்றும் தாழ்வ ழுத்த மின் நுகர்வோர்களுக் கான கூடுதல் வைப்புத்தொகை செலுத்தவும் வரும் ஜூன் 15-ஆம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது.
எனவே, பயனீட்டாளர்கள் இன்டர்நெட் பேங்கிங், செல் போன், டெபிட், கிரெடிட் கார்டு, பிபிபிஎஸ் ஆகியவற் றின் மூலம் பணம் செலுத்தி, மின் வாரிய அலுவலகங்களுக்கு நேரடியாக வருவதைத் தவிர்க் குமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
No comments:
Post a Comment