கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் 2.11 லட்சம் பேருக்கு கரோனா 3,847 பேர் உயிரிழப்பு, 2,83,135 பேர் டிஸ்சார்ஜ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 27, 2021

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் 2.11 லட்சம் பேருக்கு கரோனா 3,847 பேர் உயிரிழப்பு, 2,83,135 பேர் டிஸ்சார்ஜ்

புதுடில்லி,மே27- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 3,847 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குண மடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தின மும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச் சகம் வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு:

புதிதாக 2,11,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த  பாதிப்பு எண்ணிக்கை 2,73,69,093 ஆக உயர்ந்தது. புதிதாக 3,847 பேர் உயிரிழந் துள்ளனர். இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந் தோர் எண்ணிக்கை 3,15,235 ஆக உயர்ந்துள்ளது. தொற் றில் இருந்து ஒரே நாளில் 2,83,135 பேர் குணமடைந் துள்ளனர். இதன் மூலம், நாட் டில் மொத்தம் குணமடைந் தோர் எண்ணிக்கை 2,46,33,951 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா வில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 24,19,907 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம், நாட்டின் இதுவரை 20,26,95,874 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment