18.05.2021
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
றீ திரிணாமுல் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் நான்கு பேரை சிபிஅய் கைது செய்தததைக் கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா, சிபிஅய் அலுவலகம் சென்று முற்றுகை போராட்டம் நடத்தினார்.
றீ கரோனா தடுப்புக்காக பொது இடங்களில் ஆவி பிடிப்பது கரோனா பரவலை அதிகரிக்கும் என தமிழ் நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் எச்சரித்துள்ளார்.
றீ பிரதமர் கேர் என மத்திய அரசின் டிரஸ்ட் சார்பாக வாங்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் வேலை செய்யாமல் பயனற்று கிடக்கின்றன. பிரதமரும் யார் கண்ணிலும் படாமல் உள்ளார் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
அலகாபாத் உயர்நீதிமன்றம் திங்களன்று உத்தரபிரதேசத்தின் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள மருத்துவ கட்டுமானம் செயலற்று உள்ளது. பிரபலமான இந்தி வார்த்தையான ராம் பரோஸ் (கடவுளின் தயவில்) போலவே இருக்க முடியும் என்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தி டெலிகிராப்:
எஸ்.சி., எஸ்.டி. மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகையை நிறுத்திவிடலாம் என மத்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் பொருளாதார வளர்ச்சி நிறுவனம் (அய்.இ.ஜி) நடத்திய ஆய்வு அறிக்கையின் பரிந்துரையை கைவிட வேண்டும் என மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் மத்திய கல்வி அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment