மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 18, 2021

மறைவு

ஈரோடு. திராவிடர் கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் தே.காமராஜின் தந்தையும் திராவிடர் கழக மகளிர் பாசறை செயலாளர் கா.ஜீவரத்தினத்தின்மாமனாருமாகிய  .தேவராஜ் (வயது 68) உடல் நலக்குறைவு காரணமாக நேற்று 17.05.2021 மாலை 5.30 மணிக்கு தனது இல்லத்தில் இயற்கை எய்தினார் என்பதை அறிந்து வருந்துகிறோம். தகவல் அறிந்ததும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தே.காமராஜை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு  ஆறுதல் கூறினார்  மேலும் கழக பொதுச் செயலாளர்  வீ.அன்புராஜ், பொதுச் செயலாளர் தஞ்சை.இரா.ஜெயக்குமார், பெரியார் திடல் மேலாளர் சீத்தாராமன், மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன், ஆகியோர் தொலைபேசி வாயிலாக அவரது மனைவி தே.கலாவதி, மகன் தே.காமராஜ் மருமகள் கா.ஜீவரத்தினம், மகள்கள். தே.வடிவுக்கரசி, தே.மகேஷ்வரி,பேரக்குழந்தைகளுக்கு, ஆறுதல் கூறினார்கள். திராவிடர் கழக சார்பில் மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு .சண்முகம், தலைமையில் மாவட்ட தலைவர் கு.சிற்றரசு,மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், பொதுக் குழு உறுப்பினர் கோ.பாலகிருஷ்ணன், பெரியார் வாசகர் வட்ட தலைவர் பி.என்.எம்.பெரியசாமி, மண்டல இளைஞரணி செயலாளர் சா.ஜெபராஜ் செல்லத்துரை, செ.பிரகாசன், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் பெ.மதிவாணன், இளைஞரணி மாநகர செயலாளர் .தங்கராஜ், திமுக சார்பில் முன்னாள் கவுன்சிலர் மேனகா நடேசன்மாலதி பெரியசாமி, ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர். இரவு காவேரி கரையில் உடல் எரியூட்டப்பட்டது. தொடர்புக்கு தே.காமராஜ்:- 9367766323

No comments:

Post a Comment