500 ஆக்சிஜன் படுக்கைகள் வசதியுடன் கரோனா சிகிச்சை மய்யம் தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 26, 2021

500 ஆக்சிஜன் படுக்கைகள் வசதியுடன் கரோனா சிகிச்சை மய்யம் தொடக்கம்

மதுரை, மே 26 மதுரை, தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கைகள் வசதியுடன் கூடிய கரோனா சிகிச்சை மய்யத்தை  தமிழக முதலமைச்சர் மு.. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னையைச் சேர்ந்த ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ் கட்டுமான நிறுவனம், மேஹா என்ஜீனியரிங் அண்ட் இன்ஃபிராஸ்ட்ரக்சர் லிமிடெட் மற்றும் கிரெடாய் அமைப்புடன் இணைந்து, 72 மணி நேரத்தில் இந்த வசதியினை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவிட் 19 பெருந்தொற்றுக்கு எதிராக பொதுமக்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டிருக்கும் இவ்வேளையில், நமது அரசின் மீட்புப் பணிகளுக்கு உதவிக் கரம் நீட்டும் விதமாக ஜி ஸ்கொயர் ரியால்ட்டர்ஸ் நிறுவனம், கிரெடாய் அமைப்புடன் இணைந்து, சில கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியுடன் தமிழக அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட 4000 படுக்கைகளை உருவாக்கித் தர முன் வந்துள்ளது. இதனால் பாதிப்பு கண்ட - அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை கிடைக்க வாய்ப்புகள் உருவாகும் என கிரெடாய் அமைப்பின் சென்னைப் பிரிவுத் தலைவர் சுரேஷ் கிருஷ்ணா,

ஜி ஸ்கொயர் நிறுவன மேலாண் இயக்குநர் பாலா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

 

கோவிட் பெருந்தொற்றால் பாதித்த தொழிலாளர்களுக்கு உதவி

சென்னை, மே 26  கோவிட் பெருந்தொற்றால் பாதிப்பு கண்ட பணியாளர், விற்பனையாளர், மற்றும் விற்பனையாளர்களது பணியாளர் என அனைவருக்குமான சிகிச்சை செலவுகளைத் தானே ஏற்றுக் கொள்ள சோனாலிகா நிறுவனம் முன்வந்துள்ளது. அது மட்டுமின்றி, இந்த பாதிப்பினால் இத்தரப்பினர் யாரும் எதிர்பாராதவிதமாக இறக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கவும் இந்நிறுவனம் முன்வந்துள்ளது. 

இந்தத் திட்டங்கள் குறித்து பேசிய இக்குழுமத்தின் செயல் இயக்குநர் ரமன் மிட்டல், கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலை சற்றும் கணிக்க இயலாததாகவும், பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகவும் உள்ளது.   ஆதரவாக நாமும் இருக்கிறோம் என்பதை உணர்த்தும் விதமாக, சிகிச்சைக்கான நிதியை வழங்க புதிய திட்டம் ஒன்றின் மூலம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கவும், அகால மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாய் வரை நிதி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.  


No comments:

Post a Comment