ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 26, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் தன்னைப் போலவே வேறு சில ஆசிரியர்களும் இதே போல் நடந்துள்ளனர் என காவல் துறையில் வாக்குமூலம் அளித்துள்ள தாக தகவல் வந்துள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*  மாடெர்னாவின் ஒற்றை-டோஸ் கோவிட்-19 தடுப்பூசி இந்தியாவில் அடுத்த ஆண்டு சாத்தியமாகும். 2021இல் 5 கோடி அளவுகளுடன் ஃபைசர் தயார் ஆகும். உள்நாட்டு சந்தையில் கொள்முதல் செய்யப்பட்ட தடுப்பூசிகளை மேலும் விநியோகம் செய்வதற்கு மத்திய அரசு தனது சொந்த ஏற்பாட்டை செய்யும்.

தி இந்து:

*  லட்சத்தீவின் நிர்வாகியாக இருக்கும், குஜராத் பாஜக அரசின் முன்னாள் அமைச்சர் பிரபுல் படேல், முஸ்லீம் மக்கள் அதிகமாக வாழும் அத்தீவில் சாராயக்கடைகளைத் திறக்கவும், மாட்டுக்கறி உணவுக்குத் தடையும் விதித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அப்பதவியில் இருந்து உடன் நீக்கப்பட வேண்டும் என குடியரசுத் தலைவர்க்கும் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

 தி டெலிகிராப்:

*   கரோனா தொற்றின் காரணமாக மக்கள் மரணம் அடைந்துவரும் நிலையிலும், பாஜகவின் உயர் தலைமை அடுத்த ஆண்டு (2022) நடைபெறவுள்ள உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான திட்டங்களை வகுக்கத் தொடங்கியுள்ளது.நரேந்திர மோடி அரசு மற்றும் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் தோல்விகள் வாக்காளர்களின் மனநிலையை பாதிக்கக்கூடும் என்ற கவலையில், உயர்மட்ட தலைமை அவர்களின் பிம்பத்தை மேம்படுத்துவதற்கான வழிகளை வகுக்க மூலோபாய அமர்வு களை நடத்துகிறது.

    - குடந்தை கருணா 


No comments:

Post a Comment