காவல்துறை தலைமை இயக்குநரிடம் விளக்கம் கேட்கும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்
சென்னை, மே 26 சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட விவ காரம் குறித்து, தேசிய குழந் தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) விசார ணைக்கு எடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த ஆணை யத்தின் காவல்துறை தலைமை இயக்குநர் உறுப்பினர் டாக் டர் ஆர்.ஜி.ஆனந்த், தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
இந்த விவகாரத்தில் போக் சோ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
பாதிக்கப்பட்ட மாணவி களுக்கு உளவியல் ரீதியாக கவுன்சிலிங் வழங்க வேண்டும். இதன் அடிப்படையில் எடுக் கப்பட்ட நட வடிக்கை குறித்த அறிக்கையை 3 நாட்களுக்குள் ஆணையத் துக்கு காவல்துறை தலைமை இயக்குநர் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
தேசிய பாதுகாப்பு உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் அலுவலகம் சார்பில் தனியாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், கரோனா பெருந் தொற்று காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் அதிகமாகி வரும் சூழலில் இது போன்ற சம்ப வங்கள் வருத்தம் அளிப்பதாக டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இது போன்ற குற்றங்கள் பள்ளி, கல்லூரி களில் நடைபெறாமல் இருப் பதை சம்பந்தப்பட்ட அதி காரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், தேசிய குழந்தைகள் உரிமை பாது காப்பு ஆணையம் வெளியிட்ட வழிகாட்டு நடை முறைகளின்படி ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறதா? என்பதை பள்ளி நிர்வாகம் முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்றும் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு ள்ளது.
No comments:
Post a Comment