வங்கதேசம் என்றால் இளக்காரமா?
* இந்தியாவின் தனி நபர் வருமானம் வங்க தேசத்தைவிடக் குறைவு.
>> இஸ்லாமிய நாட்டோடு ஒப்பிடுவதா என்று மூக்கின்மேல் கோபம் வரும் ஆளவந்தார்களுக்கு.
மாற்றி யோசிக்கிறார்களா?
* அண்மைக்காலமாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரியைத் தூக்குத் தூக்கு என்று தூக்குகிறார்களே!
>> எதற்கும் நரேந்திர மோடி எச்சரிக்கையாக இருக்க வேண்டுமோ!
கல்யாணம் நிச்சயிக்கப்படுவது சொர்க்கத்திலா?
* விமானத்திலேயே காதல் ஜோடி திருமணம்.
>> செவ்வாய்க் கோளிலும்கூட நடக்கப் போகிறதே!
காசி மசூதியைப்பற்றியா?
* ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை.
>> பிரதமர்கூட ஆலோசனை நடத்துகிறாரா? புதிய சேதியாக இருக்கிறதே!
No comments:
Post a Comment