ஆறு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறையவில்லை பரிசோதனைகளை அதிகரித்து பாதிப்பைக்கண்டறிய உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 28, 2021

ஆறு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறையவில்லை பரிசோதனைகளை அதிகரித்து பாதிப்பைக்கண்டறிய உத்தரவு

சென்னை, மே 28- ஊரடங்கு நீட்டிப்பு, கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்துவது ஆகியவை குறித்து தமிழக முதலமைச்சர் மு.. ஸ்டாலின் அமைச்சர்களுடனும் அரசு உயரதிகாரி களுடனும் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தமிழக காவல்துறை டி.ஜி.பி. திரிபாதி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர், வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளின் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆலோசனையின்போது பேசிய முதலமைச்சர் மு.. ஸ்டாலின், "கோவை, திருச்சி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கரோனா பாதிப்பின் தாக்கம் குறையவில்லை. ஆறு மாவட்டங்களில் கரோனா பரிசோதனைகளை அதிகரித்து, பாதிப்பைக் கண்டறிய வேண்டும். அடுத்த ஓரிரு வாரங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்" என்றார்.

புதுச்சேரியில் 1 லட்சத்தை

கடந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை

புதுச்சேரி, மே 28- புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப் பட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலத்தில் புதிதாக 1,137 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 1,00,677 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,455 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 1,486 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் மூலம் கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 84,749 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் தற்போது 14,473 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment