ஆரிய திராவிடப் போரில் திராவிடம் வென்றது!
கழகத் துணைத் தலைவர் பெருமித உரை
சென்னை,
மே 28- திராவிடர் கழக இளை ஞரணி சார்பில் தேர்தல் முடிவுகளும் புதிய ஆட்சியும் எனும் தலைப்பில் 25 ஆவது இணையவழி தொடர் சொற் பொழிவு கூட்டம் மே 23 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி முதல் 8.45 மணி வரை நடைபெற்றது.
கூட்டத்தில் ஆவடி மாவட்ட இளைஞரணி தலைவர் வே.கார்வேந்தன் வரவேற்புரையாற்றினார்.
மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் அ.சுரேஷ் தலைமை
வகித்தார். மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன்
இணைப் புரை வழங்கினார். மாநில
இளைஞரணி துணைச் செயலாளர்கள் ஈரோடு தே. காமராஜ், பொன்னமராவதி வெ.ஆசைத் தம்பி,
தஞ்சை இரா.வெற்றிக்குமார், பொழிசை கண்ணன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
திராவிடர் கழக பொதுச்செயலாளர் ஜெயக்குமார் தொடக்க உரையாற்றினார்.
கழகத்
துணைத் தலைவர் உரை :
உண்மை
வலுவானது பலமானது அது வெற்றியடைந்து தான் தீரும் என்கிற தளராத நம்பிக்கையோடு அதற்கான உழைப்பை திட்டத்தை செயல்படுத்தினால் நம் இன எதிரிகள் இருக்கும்
இடம் தெரியாமல் போய் விடுவார்கள் என்பதை கடந்த கால வரலாறுகள் இங்கு பதிய வைத்திருக்கின்றன.
ஆரிய-திராவிடப் போர் :
உடம்பெல்லாம்
மூளை என்று சொல்லப்படும் ராஜாஜி ஒருமுறை தந்தை பெரியாரை தனது ஜென்மப் பகைவர் என்று சொன்னார். தந்தை பெரியாரும் அதனை உண்மைதான் என ஏற்றுக் கொண்டார்.
அதே வார்த்தையை அய்ம்பது, அறுபது ஆண்டுகளுக்கு பிறகு ஜெயலலிதா முத்தமிழ் அறிஞர் கலைஞரை பார்த்து என்னுடைய ஜென்ம விரோதி என்று சொன்னார். இவை அனைத்தும் ஒரு உண்மையை நமக்கு தெளிவாக்குகிறது.
நாட்டில்
நடைபெறுவது ஒரு அரசியல் போராட்டம் என்று மேம்போக்காக பார்ப்பவர்களுக்குத் தெரியும். ஆனால், உள்ளபடியே நாட்டில் நடைபெறுவது ஆரிய -- திராவிட இனப் போராட்டமே என்று தலைவர் தந்தை பெரியார் சொன்னது எவ்வளவு பெரிய உண்மை என்பதை நடந்து முடிந்த தேர்தல்கள் காண்பிக்கின்றன.
அய்யா
அவர்கள் ரஷ்யாவிற்கு சென்று வந்த பிறகு ம.சிங்காரவேலர் உடன்
ஈரோட்டில் இருக்கும்போது சுயமரியாதை இயக்கத்தில் ஒரு அரசியல் பிரிவை உரு வாக்கலாம் என்ற முடிவை எடுத்தார்கள். ஆனால் அந்த முடிவு வேண்டாமென கைவிடப்பட்டது. அதற்குப் பிறகு பெரியார் அவர்கள் நேரடியாக தேர்தல் அரசியலில் நிற்காவிட்டாலும் ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று பொறுப்பற்ற தன்மையும் இல்லாமல் கண்டிப்பாக ராமன் ஆளக் கூடாது - ராவணன் தான் ஆள வேண்டும் என்ற
எண்ணத்தின் அடிப்படையில் பல்வேறு வியூகங்களை எடுத்து ஒரு களப் போராளியாக இருந்தார். தேர்தலில் நின்ற அரசியல் கட்சியினரை விட அதிக மான இடங்களில் பிரச்சாரம் செய்தவர் தந்தை பெரியார். அதிகக் கூட்டங்களில் பேசியவரும் தந்தை பெரியாரே. 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இரவு 12 மணி வரை கூட பேசி இருக்கிறார்.
தேர்தலில்
ஈடுபடாத இயக்கத்திற்கு அதன் தலைவர் தந்தை பெரியாருக்கு என்ன கவலை என்றால் யார் ஆட்சிக்கு வரவேண்டும், வந்தவுடன் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் பார்ப்பனிய ஆதிக்க வேர் அழிக்கப்பட வேண்டும். கல்வி உரிமை எல்லோருக்கும் தடையின்றி கிடைத்திட வேண்டும் பெண்களின் உரிமை செழித் தோங்க வேண்டும். சமத்துவம் மலர வேண்டும். என்ற அடிப்படையில் யார் ஆட்சிக்கு வந்தால் பயனாக இருக்கும் என்று பிரச்சாரம் செய்வதுதான் பெரியா ரின் செயல்பாடு.
1920, 1923 ஆகிய
இரண்டு முறை நடை பெற்ற தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெற்று இன்றைக்கு நாம் பெற்றிருக்கிற உரிமைகளுக்கும் வாய்ப்புகளுக்கும் அடித் தளம் அமைத்துக் கொடுத்தது.
நீதிக்கட்சி
தலைவராக பெரியார் :
1927 ஆண்டுதேர்தல்
தோல்விக்குப் பிறகு நீதிக்கட்சி முடங்கிவிட்டது. பனகல் அரசர் மறைந்துவிட்டார். அந்த நேரத்தில் தோல்வியும் நன்மைக்கே என்று தோல் வியாக இருந்தாலும் எதிர்ப்பாக இருந் தாலும் அவற்றை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றும் மனத்துணிவு கொண்டவரான, நீதிக்கட்சியின் உறுப்பினராகக் கூட இல்லாதவராக இருந்த தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறையில் இருக்கும் பொழுது நீதிக் கட்சி நிர்வாகி களால் இந்த கட்சியை தலைமை ஏற்று நடத்தக் கூடிய தகுதி உங்களுக்கு தான் இருக்கிறது என முடிவு செய்து
தந்தை பெரியாரை தலைமையேற்க அழைத் தார்கள். இப்படி சிறையில் இருக்கும் பொழுது பெரியார் மீது சுமத்தப்பட்டது தான் நீதிக்கட்சியின் தலைவர் பதவி.
ராஜாஜி
பதவியை விட்டு விலகிய போது தந்தை பெரியாரை நீங்கள்தான் சென்னை மாகாணத்தின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமென ஆங்கிலேய கவர்னர்கள் கேட்டுக்கொண்ட னர். ஆனால், பெரியார் நீங்கள் முகவரி தெரியாமல் வந்து இருக்கிறீர்கள். இந்த பதவி அரசியலுக்காக நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், நான் செய்யக்கூடிய இந்த சமுதாயப் பணியை செய்வதற்கு நாதியில்லை என்று தந்தை பெரியார் கூறினார். பெரியார் துணிவான சரியான முடிவை எடுப்பவர் என்பதற்கு இது ஒன்றே உதாரணம்.
நாடு
சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் 1952 இல் நடைபெற்ற தேர்தல் தான். அதில் இந்தியா முழுமையும் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட காங்கிரசு கட்சிக்கு தான் தங் கள் ஓட்டு என மக்கள் அனைவரும்
காங் கிரசிற்கு வாக்களித்தனர். ஆனால் சென்னை மாகாணத்தில் மட்டும் பெரியார் பிரச் சாரம் செய்ததன் விளைவாக காங்கிரசிற்கு எதிராக வாக்களித்தனர். இந்த தேர்தலில் கம்யூனிஸ்டுகள் ஆட்சி அமைக்கும் நிலையை ஏற்படுத்திக் கொடுத்தார் தந்தை பெரியார். அவர்கள் அதனை சரியாக பயன்படுத்தாத காரணத்தினால் அன் றைக்கு அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டவர் அறிஞர் அண்ணா. ராஜாஜி தொழில் கல்வி என்ற பெயரில் குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்தார். தந்தை பெரியார் கொடுத்த இந்த குலக்கல்வி என்ற பெயர் கடைக் கோடி மக்கள் வரை சென்றதன் விளைவு ராஜாஜியால் பார்ப் பனர்களால் மீளமுடியாத அளவிற்கு பெரும் பின்னடைவை சந்திக்க நேர்ந்தது அதன் காரணமாக ராஜாஜி தனது பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த சென்னை மாகாண முதல்வர் யார் என்ற பிரச்சினையில் தந்தை பெரியார் தான் உங்கள் எதிரிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் நீங்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என காமராஜரை பதவி
ஏற்க வைத்தார்.
இது
பெரியார் மண் :
தேர்தல்
அரசியலுக்கு செல்லாத பெரியார் அந்த அரசியலை ஆட்சியை நடத்தி இருக்கிறார் அரசியலில் ஒரு திருப்பு முனையை கொடுத்திருக்கிறார். பார்ப்பன எதிர்ப்பு என்பது தான் எனக்கு ஏபிசிடி ஆக இருக்கிறது. அந்தப்
பார்ப்பன எதிர்ப்பு தான் என்னை பகுத்தறிவாதியாக மாற்றியது, அந்தப் பார்ப்பன எதிர்ப்பு தான் எனக்கு சமூகநீதி உணர்வை உண் டாக்கியது என்று தந்தை பெரியார் கூறினார். அந்தப் பார்ப்பன எதிர்ப்பு என் பதனை இன்றைக்கு தமிழ்நாடு நிரூபித்து உள்ளது. 234 தொகுதிகளில் ஒரு இடத்தில் கூட பார்ப்பனர்களால் வெற்றிபெற முடியவில்லை. இது பெரியார் மண்ணா? திராவிட இயக்க பூமியா? என்று கேட்ப வர்களுக்கு மக்களே பதில் கூறி இருக் கிறார்கள்.
அறிஞர்
அண்ணா ராஜாஜியுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்ற பிறகு ஆட்சி எந்தத் திசை நோக்கிச் செல்லும் என்று உலகத் தமிழர்களே எதிர் பார்த்த போது அறிஞர் அண்ணா நேராக திருச் சிக்கு சென்று தந்தை பெரியாரை சந் தித்தார். இந்த சந்திப்பு தான் தமிழ்நாட்டின் அரசியலில் மாபெரும் திருப்பு முனையை உருவாக்கியது.
ராமன்,
கிருஷ்ணன், முருகன் தோற்றனர் :
1971 தேர்தலில்
பெரிதாகப்பேசப்பட்டது
ராமன் படம் செருப்பால் அடித்த தந்தை பெரியார் கூட்டணிக்கா உங்கள் ஓட்டு என்பதுதான். இதன் காரணமாக தேர்தல் முடிவு என்னவாகும் என திமுகவுக்கும் ஒரு
அச்சம் இருந்தது. ஆனால் 184 இடங் களில் வெற்றி பெற்றது திமுக.
அப்போது
துக்ளக் "தமிழ்நாட்டு மக்கள் பக்தியில் மூழ்கி இருந்தாலும் தேர்தல் என்று வரும்போது திராவிடர் கழகத்திற்கு தான் வாக்களிக்கிறார்கள்" என்று எழுதியது.
தேர்தல்
முடிவில் ராஜாஜி "இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழ தகுதி இழந்துவிட்டது, மகா புருஷர்கள் எல்லாம் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துவிட்டார்கள்" என்று எழுதினார். அதே நேரத்தில் தந்தை பெரியார் "என் பழி நீங்கியது, உங்களுக்கு உலகப்புகழ் கிடைத்தது, பாராட்ட வாழ்த்த வார்த்தைகள் இல்லை" என்று எழுதினார். 2019 நாடாளுமன்ற தேர்தல் கிருஷ் ணன் கடவுளை வைத்து அரசியல் செய் தார்கள். 2021 தேர்தலில் முருகனை வைத்து அரசியல் செய்தார்கள் இரண் டிலும் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ஜோசியம்
பொய்த்தது :
தந்தை
பெரியார் ஒரு முறை சொன் னார்கள் "வரும்காலத்தில் திமுக நடமாட வேண்டும் என்றால் பார்ப்பன எதிர்ப்பு என்பதை கையிலெடுக்க வேண்டும், அந்த நேரத்தில் அவர்கள் என்னை அணுகக் கூடும், நானும் அவர்களுக்கு உதவக்கூடும். தந்தை பெரியார் மிகப்பெரிய தொலை நோக்காளர் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணமே.
இப்போது
நடந்து முடிந்த தேர்தலின் பொழுது எச்.ராஜா ஜோசியம் பார்த்தா ராம். ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வராகும் வாய்ப்பே இல்லை என்று. அந்த ஜாதகமும் பொய்த்தது ஜோசியமும் பொய்த்தது. மக்கள் சரியான தீர்ப்பை வழங்கி இருக் கிறார்கள் பல தோல்விகளில் இந்த
ஜோசியமும் தோற்றது ஒரு தோல்வியே.
திராவிட
சித்தாந்தம் :
எந்த
நிலையில் தேர்தலில் நேரடியாக போட்டியிடாத திராவிடர் கழகத்தின் கொள்கைதான் எல்லா தேர்தல்களிலும் அடிநாதமாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.
பாஜகவுக்கு
எதிரான ஒரு அரசியல் தேவைப்படுகிறது.இந்துத்துவா விற்கு எதிரான ஒரு சித்தாந்தம் தேவைப்படுகிறது அந்த சித்தாந்தம் திராவிட சித்தாந்தம் தான் அதற்கான தலைவர் தந்தை பெரியார் தான் இது தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியா முழுமைக்கும் இதுதான் இன் றைய நிலைமை என்று ஒரு தெளிவுரையை கழகத் துணைத் தலைவர் தந்தார்.
கூட்டத்தில்
விழுப்புரம் மண்டல இளைஞரணி செயலாளர் தா. இளம்பரிதி, புதுவை இளைஞரணி தலைவர் தி.இராசா, கோவை
மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.பிரபாகரன், தூத்துக்குடி
மண்டல இளைஞரணி செயலாளர் கார்த் திக், குடந்தை மாவட்ட இளைஞரணித் தலைவர் க.சிவகுமார், தஞ்சை
மாவட்ட இளைஞரணி தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பட்டுக் கோட்டை மாவட்ட இளைஞரணி செய லாளர் அரவிந்த்குமார், ஆத்தூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் வேல்முருகன்,
தென்காசி மாவட்ட
இளைஞரணி
செயலாளர் சண்முகம் கோவை வெற்றிச்செல்வன், விருத்தாசலம் பாலச்சந்தர், தஞ்சை
மாநகர இளைஞ ரணித் தலைவர் பெரியார் செல்வம்.
கழகப்
பிரச்சார செயலாளர் வழக்கு ரைஞர் அருள்மொழி, பகுத்தறிவு எழுத் தாளர் மன்றத் தலைவர் வா.நேரு, மாநில
மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்கு ரைஞர் சே.மெ.மதிவதனி,
மும்பை கணே சன், குமணராசன், தஞ்சைமண்டல தலை வர் அய்யனார், செயலாளர் குருசாமி, வேலூர்
மண்டல செயலாளர் பட்டாபி ராமன், மாநில
ப.க துணைத் தலைவர்
அண்ணா சரவணன், தஞ்சை மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் அருணகிரி, திருத்துறைப்பூண்டி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விருதுநகர் மாவட்ட செயலாளர் ஆதவன், தாராபுரம் மாவட் டத் தலைவர் கணியூர் கிருஷ்ணன், செய லாளர் சண்முகம், கடலூர் மாவட்டத் தலைவர் தண்டபாணி, பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் வீரையன், திருச்சி
மாவட்டத் ஆரோக்கியராஜ், விருத் தாசலம் மாவட்டச் செயலாளர் ப.வெற்றிச்செல்வன், சிதம்பரம் மாவட்டத்
தலைவர் பேரா. பூ.சி.இளங்கோவன்,
பொதுக்குழு உறுப்பினர் நீலகண்டன், ப.க முருகேசன்,
கோவை இராஜா, கோவை இரமேசு உள்பட 90-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
புதுவை
மாநிலத் தலைவர் சிவ.வீரமணி இணைய வழியாக ஒருங்கிணைப்பு செய்து உதவினார். கூட்டத்தின் நிறைவில் கடலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் நா.உதயசங்கர் நன்றி
கூறினார்.
தொகுப்பு:
நூலகர் வே.இராஜவேல்
தஞ்சை

No comments:
Post a Comment