வரலாற்றிலும் மூக்கை நுழைக்கிறது மோடி அரசு
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் கடும் கண்டனம்
திராவிடர் வரலாற்று
ஆய்வு மய்யத் தலைவர் முனைவர் அ. ராமசாமி, செயலாளர்
முனைவர் ந.க. மங்கள
முருகேசன் ஆகிய இருவரும் மய்ய அரசு புதிய கல்வித் திட்டத்தில், இளங்கலை வரலாறு பாடத்திட்டத்தில் இவ் வாறு மேற்கொண்டுள்ள திணிப்புகளையும், திரிபு களையும் கண்டித்துக் கண்டன அறிக்கை வெளியிட் டுள்ளனர்.
இந்தியையும்,
சமசுக்கிருதத்தையும் திணிப்பதில் மோசடியாக ஈடுபட்டுள்ள மய்ய அரசின் வழிகாட்டு தலின்படி பி.ஏ. பயிலும்
மாணவர்களுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டம் ஒன்றை பல்கலைக் கழக நிதி உதவிக்குழு (யு.ஜி.சி.)
வெளியிட்டுள்ளது.
புதிய
கல்விக் கொள்கையின்படி - புதிய பாடத் திட்டத் தின்படி இளங்கலை வரலாறு படித்திடும் மாணவர்களுக்கு
12 பாடங்களை ஒதுக்கியுள்ளனர். அப்பாடங்களில் திணிப்பு களையும் திரிபுகளையும் செய்திருப்பது கண்டு வரலாற்று ஆய்வாளர்கள், வரலாற்று அறிஞர்கள், வரலாற்றுப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் அதிர்ச்சியும், கவலையும் கொண்டுள்ளனர். இதைச் சற்று விளக்கமாகவே மக்கள் மன்றத்தின் முன் வைக்கிறோம்.
பாரதமாக
இந்தியா மாற்றம்
பாடம்
1:
அதாவது,
பாரதம் ஒரு கருத்தாக்கம் எனும் புதிய தலைப்பில் உருவாக்கியுள்ளனர். இந்தியத் துணைக் கண்டம் ஆண்டாண்டுக் காலமாக இந்தியா, இந்தியத்
துணைக் கண்டம் என்றே அழைக்கப் பெற்று வந்துள்ளது. இந்தியா என்றுதான் உலகநாடுகள் அறியும். உலக வரலாற்று அறிஞர்களும் இந்தியா எனும் பெயரையே ஏற்றுக் கொண்டுள்ளனர். 'இந்தியா' எனும் சொல்லுக்குப் பதில் பாரதம் எனும் சொல்லை உலக வரலாற்று மாணவர்கள் இதுவரை அறிந்திடாத, கேள்விப் பட்டிராத இந்தப் பாரதம் எனும் சொல் திணிப்பு கண்டனத்திற்குரியது. இந்தியா என்பதே நீடிக்கவேண்டும்.
அந்தத்
தாளின் முதல் அலகில் (Unit 1)
* பாரத
வர்ஷா - ஒரு புரிதல், பாரதம்
- பல்பொருள் தன்மை என்று
ஒரு தலைப்பிலும்
* புகழ்மிக்க இந்திய இலக்கியங்கள், வேதங்கள், உபநிடதங்கள், காப்பியங்கள், சமண, புத்த இலக் கியங்கள், ஸ்மிருதி, புராணங்கள் என்று ஒரு தலைப்பிலும் காண்கிறோம்.
* மொழியியல்
கோட்பாடுகள் எழுத்துகள், பிராமி, கமோஷ்டி, பாலி, பிராகிருதம், சமசுகிருதம் - என்று
ஒரு தலைப்பிட்டுள்ளனர்.
இதில்
அவர்களின் சூழ்ச்சி - கல்தோன்றி மண்தோன் றாக் காலத்தே தோன்றிய - சமசுக் கிருதத்திற்கும் மூத்த மொழி செம்மொழி - நம் தாய்த் தமிழ் இடம் பெறவில்லை. ஆம்! தமிழைத் திட்டமிட்டுப் பாடத்திலும் புறக்கணிக்கும் திருப்பணியைச் செய்திடும் அவலத்தை அரங்கேற்றியி ருக்கிறார்கள்.
மதவாத
தத்துவம்
பாடப்பொருளிலும்
மதவாத தத்துவ அரங்கேற்றத்தைத் துணிந்து செய்திருக்கிறார்கள். அடுத்த அலகில் புதிதாக வசுதைவ குடும்பசும் என்னும் மதவாத தத்துவம் புதிதாக இடம் பெற்றுள்ளது. வரலாறு கற்பிக்கும் ஆசிரியர்கள் எவரும் கேள்வியுற்றிராத ஒன்று இது.
ஆக,
முதல்பாடமே முரண்பாட்டின் - திரிபுவாதத்தின் மொத்தமாக இருக்கிறது.
இந்தியாவைப்
பாரதம் என்று விளித்துப் பதைபதைக்கச் செய்கின்றனர். இந்திய இலக்கியங்கள் என்றால் வேதங்கள், உபநிடதங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள்தாம் என்று கூறி, கிறித்துவ ஊழிக்கு முற்பட்ட உலகம் போற்றும் தமிழ்ச்சங்க இலக்கியங்கள், சிலம்பு, மணிமேகலை முதலிய தமிழ் இலக்கியங்கள் பற்றிய பேச்சே காணோம்.
மொழி
என்றால் பாலி, பிராகிருதம், சமசுகிருதம் மட்டும் தானா? தமிழ் இல்லையா?
இது
மட்டுமல்லாது, வலிந்து ஒரு மதவாதத் தத்து வத்தைப் புகுத்துவது என்பது, தவறான கருத்தும் ஆகும். ஆக முதற்பாடல் கோணல்
அதாவது முதற்கோணல் முற்றும் கோணல் ஆகும்.
மூன்றாவது
தாள் இந்திய வரலாறு தொடக்கக் காலம் முதல் CE 550 வரை
A.D. B.C. என்பது
வேண்டாம் என்று CE- Common Era என்று
மாற்றி விட்டனர். இப்பாடத்தின் முதல் அலகு (Unit - I) பாடத்தலைப்பு
சிந்து
- சரசுவதி நாகரிகம்,
வேத
கால நாகரிகம் - விவாதம்
இதுநாள்
வரை இந்திய வரலாற்றில் எந்த வரலாற்றுப் புத்தகம் ஆனாலும் சிந்துவெளி நாகரிகம் தான் பெரும் பான்மையும் எழுதப்பெற்றது.
உலக
நாகரிக வரலாற்றில் 'History of World Civilization' இந்தியாவிற்குத் தனிச்சிறப்பிடத்தைப் பெற்றுத் தந்தது.
அதற்கு
மாறாகக் கற்பனையில் ஓடும் சரசுவதி நதியை மய்யமாக வைத்துத் தொடங்குகிறது முதல் பாடம். இப்போது புரிந்து இருக்குமே! சரசுவதி நாகரிகம், வேதகால நாகரிகம் என்பது ஆர்.எஸ்.எஸ். காவிகள், சங்கிகள் பின்னணி கொண்ட மதவாத பா.ஜ.க.
அரசின் மோடி அரசின் உள்நோக்கம் கொண்ட புதிய உருவாக்கம் ஆகும்.
திராவிடம்
கசக்கிறது
ஆரியர்கள்
என்றால் மத்திய ஆசியாவிலிருந்து வந்த வந்தேறிகள் - கைபர் கணவாய் வழியே வந்தவர்களே என்பது உலக வரலாற்று அறிஞர்கள் ஆய்ந்து தேர்ந்த முடிவு.
அதை
மாற்ற அடுத்த அலகிற்கு ஆரிய நாகரிகம் என்று தலைப்பிட்டு உள்ளனர். மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் ஆரியர்கள் என்பதை மாற்றி, ஆரியர்கள் இந்தியர்களே என நிலைநாட்ட இந்த
இரண்டாம் அலகில் முயற்சி மேற்கொள்வதைக் காண்கிறோம். எப்படி?
ஆரிய
நாகரிகம் எனும் தலைப்பினுள் ஆரியர்களின் பூர்விக நிலை - ஆரியர்களின் படையெடுப்பு பற்றிய கட்டுக்கதை, பலகோட்பாடுகள், வேதப்பண்பாடு, வேத கால அரசியல், சமூகம், பொருளாதாரம் எனக் குறித் துள்ளனர்.
இப்படி
ஆரியத்தைத் தூக்கி நிறுத்துபவர்கள் சிந்துவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகம் என்றும், சிந்துவெளி நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்கள் திரா விடர்கள் என்றும் உலகவரலாற்று அறிஞர்கள் ஒப்புக் கொண்ட, ஏற்றுக் கொண்ட கருத்தை, உண்மையை, வரலாற்று ஆதாரத்தைத் திட்டமிட்டே மறைத்துள்ளனர். மேலும் வேதமதம் - தத்துவம் எனும் பாடத்தையும் இதில் சேர்த்துள்ளனர்.
இதுவரை
இந்திய வரலாற்றின் பாடத்திட்டத்தில் கடந்த நூறு ஆண்டுகளாக இல்லாத ஆரிய நாகரிகம் என்பதை உருவாக்கிச் சேர்த்து இருப்பதானது இந்தியாவில் ஏற்கெனவே உறுதியான ஆரியம் வேறு, திராவிடம் வேறு எனும் ஆரிய - திராவிடக் கோட்பாடுகளைத் தகர்த்தெறியும் முயற்சியே இது. ஆரிய ஆதிக்கத்தை நிலைப்படுத்தி ஆர்.எஸ்.எஸ். மதவாத பி.ஜே.பி.
அரசு எடுக்கும் ஆபத்தான பண்பாட்டுப் படையெடுப்பு என்பதில் கிஞ்சிற்றும் அய்யமில்லை.
சரசுவதி
நாகரிகம், வேதநாகரிகம், வேத மதம், ஆரிய நாகரிகம் ஆகியவை எல்லாம் இதுவரை வரலாற்றில் இல்லாத பா.ஜ.க.
அரசின் புதிய கண்டுபிடிப்புகள் மட்டுமல்ல; புதிய திணிப்புகள்.
இன்றுவரை
என்றும் எந்த இந்திய பாடத்திட்டத்திலும் இருந்ததில்லை.
இப்போது இந்த நச்சரவம் தலைதூக்கி ஆடுகிறது.
இவையெல்லாம்
ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க
மேடைகளில் முழங்கிவந்த நச்சுக் கருத்துகள். அவற்றை இப்போதுள்ள பாசிச அரசு பாடத்திட்டத்தில் புகுத்தியுள்ளது. கல்வியை மட்டுமல்ல, இந்தியாவையே காவி மயமாக்கும் கய வாளித்தன ஆட்சியின்
துஷ்பிரயோகம்.
இவற்றை
மற்ற அறிஞர்கள் எதிர்க்கிறார்களோ இல்லையோ தமிழக வரலாற்று அறிஞர்கள் ஏற்கவில்லை. ஏற்கப் போவதுமில்லை. இவை பாடப் புத்தகங்களில் இருந்து நீக்கப் பெற வேண்டும்.
புறக்கணிக்கப்
பெற்ற சோழ அரசு தாள் 5 - இந்திய வரலாறு 550 CE முதல் 1200 CE வரை
தாள்
அய்ந்தில் முடியுடை மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாது பல்லவர்களின் ஆட்சியின் முதன்மை குறைந்துள்ளது. மேலும் கருத்துப் பிழையும் உள்ளது.
காஞ்சியைத்
தலைநகராகக் கொண்டு பல்லவர்கள் ஆட்சி செய்தனர். காஞ்சிப் பல்லவர்கள் என்னும் இடத்தில் காஞ்சிபுரம் சோழர்கள் எனச் சோழ மண்டலத்தை ஆட்சி புரிந்த சோழர்களைத் தொண்டை மண்டலத்தில் இணைத்து எழுதிய கருத்துப் பிழையும் உள்ளது. கடல் கடந்து இந்தியப் பேரரசை, தமிழ்ப் பேரரசை வேறு எந்த இந்திய மன்னர்களும் நிறுவிடாத வேளையில் கடல் கடந்து அரசு நிறுவிய மாபெரும் சோழப் பேரரசு பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. அது தமிழ்ப் பேரரசு அல்லவா? அதன் சிறப்பைப் பாராட்டவோ, பாடத்தில் சேர்க்கவோ இல்லை.
இசுலாம்
என்றால் கசக்கிறது
இந்துத்வா
வெறிகொண்ட கூட்டம் தொடர்ந்து இசுலாமிய வெறுப்பைக் கட்டவிழ்த்து விடுகிறது என்ற கூற்றுக்கு ஆதாரம் வரலாற்றுப் பாடத்திலும் பளிச்சிடுகிறது. எப்படி?
முகலாய
அரசின் மாட்சியை ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள் கூட 'Great Moghuls' மாபெரும் முகலாயப் பேரரசு என்றே கூறுவர். இந்தியக் கட்டடக் கலை வரலாற்றில் இன்றும் நிலைத்து நிற்கும் சிறப்புக்குரியது முகலாயக் கட்டடக்கலை.
பாடம்-7
- இந்திய வரலாறு 1206 - 1707 இல் இசுலாமிய அரசின் மாட்சியைப் பற்றிப் பேசாமல் முகலாயர்களின் வீழ்ச்சியை மட்டுமே பேசுவதும், முகலாயர்களின் கட்டடக் கலை பற்றியும் ஏதும் குறிப்பிடாததும் என்பதிலிருந்தே இவர்களின் யோக்கியதை நன்கு வெளிப்படுகிறது.
பிரித்தாளும்
சூழ்ச்சி
தாள்
7 நான்காம் அலகில் சமூக, பொருளாதாரம் என்னும் தலைப்பில் இந்தியச் சமுதாயத்தைப் பிளவு படுத்தும் கூற்று தென்படுகிறது.
இதுவரை
இந்திய சமுதாயம் என்றால் அது இந்து, முசுலிம், சீக்கியர், பார்சி என அனைத்துப் பிரிவுகளையும்
உள்ளடக்கிய ஒரே சமுதாயம் இந்தியச் சமுதாயம் தான். ஒன்றுபட்டு வாழும் சமூகத்தைக் கூறுபோட்டுப் பார்க்கும் அற்பத்தனத்தைச் செய்கிறது பி.ஜே.பி.
அரசு. எப்படி?
இப்பாடத்தில்
இந்தியச் சமுதாயத்தை இந்துச் சமுதாயம் எனவும், முசுலிம் சமுதாயம் எனவும் இந்தியச் சமுதாயம்தான் மதத்தின் அடிப்படையில் இரண்டாகப் பிளவு செய்து பதிவு செய்யும் மாபாதகத்தைச் செய்துள்ளது.
அதுமட்டுமல்ல;
இந்தியாவில் வாழும் கிறித்துவர்கள், சீக்கியர்கள், புத்தர்கள் எனப் பல பெரிய மதத்தினரையும்
பிற சமுதாயத்தினரையும் புறக்கணிக்கும் இந்தக் கேவல மான முயற்சி, இந்திய ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் தீங்கு விளைவிப்பதும் பாதகம் செய்வதும் ஆகும்.
இந்தியச்
சமுதாயத்தை மதத்தின் அடிப்படையில் பிரிக்கும் இப்போக்கிற்கும் ஆர்.எஸ்.எஸ். பின்னணியே அடிப்படை. இது நாட்டு நலனுக்கு எதிரானது.
தாள்
9 - இந்திய வரலாறு 1707 - 1857
இந்திய
வரலாற்றுக்குப் பெருமை சேர்க்கும் தமிழ் நாட்டைச் சேர்க்காமல் திட்டமிட்டு மறைக்க தென்னிந்திய அரசியல் நிலை - கொச்சி திருவாங்கூர் எனும் தலைப்பு உள்ளது. நிச்சயமாக இதைச் செய்த மோசடிக் கும்பல் பா.ஜ.க.
அரசின் மதவாத ஆசிரியர்களின் வேலை. சம நிலையில்லாத மதச்சார்பு
அணுகுமுறை கொண்டவர்களின் திருட்டுத் தனமான, கேவலமான செயல். ஏனென்றால், பெரிய கருத்துப் புறக்கணிப்பு, பண்பாட்டுப் புறக்கணிப்பு, தமிழ்நாட்டு வரலாற்றுப் புறக்கணிப்பும் நிகழ்த்தியுள்ளது. இந்த
ஒன்றுக்காகவே தமிழர்கள் இந்தப் பாடத் திட்டத்தைப் புறக்கணிப்பதோடு மட்டுமல்லாமல் கண்டனக் குரல் எழுப்ப வேண்டும்.
காந்தியின்
முதன்மை மறைத்த அவலம் பத்தாம் தாள் - இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு - 1857 - 1947 வரை என்பது.
இந்திய
விடுதலைப் போர் எனில் எவர் மனதிலும் முதலில் இடம் பெறும் பெயர் அண்ணல் காந்தியின் பெயர் - அவர்தம் அகிம்சைநெறி - உண்மை அறப்போர்.
அந்தக்
காந்தியடிகளுக்குக் கூடக் கொடுமை செய்திருக்கிறார்கள். காங்கிரசு மீது வெறுப்பு எனில் காந்தியின் மீதுமா? என்று கேட்க வேண்டியிருக்கிறது.
தேசப்பிதாவையே
சதித்திட்டம் செய்து முதன்மையைக் குறைத்து மிகச் சாதாரணமாகக் காந்தி என்று மட்டும் எழுதியிருக்கிறார்கள் என்றால் எவ்வளவு வக்கிரபுத்தி?
காந்தி
மட்டுமா? பதின்மூன்று ஆண்டுகள் தேச விடுதலைக்குச் சிறை புகுந்த பகுத்தறிவாளர் பண்டித ஜவஹர்லால் நேருவின் விடுதலைப் பங்களிப்பைத் திட்ட மிட்டு மறைக்கும் இரண்டாவது வரலாற்றுப் பிழைக்கும் என்ன விளக்கம்? விடுதலைப்
போர் வரலாற்றில் செய் துள்ள இந்த மாபெரும் பாதகத்திற்காகவே இந்தப் பாடத் திட்டம் சாக்கடைச் சேற்றில் புதைக்கப் பெற வேண்டியது. அக்கினித் தீயில் சாம்பலாக்கப்பட வேண்டியது.
ஒரே
இந்தியா பேசும் இந்த ஒழுக்கமில்லாதவர்கள், விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்கைச் சாதாரணத் திரை அல்ல, சமுக்காளத் திரை போட்டு முழுமையாகப் புறக்கணித்திருப்பதற்குத் தமிழகமே பொங்கி எழ வேண்டும். இந்திய
விடுதலைப் போர் வரலாறு முழுமையில்லை. நடுநிலை இல்லை. உள்நோக்கமுடையது.
தாள்
11 - இன்றைய இந்திய வரலாறு 1947-2000
இவர்களின்
பாடத்திட்டமே முழுமையாகத் தேவையில்லாதது. ஒரு திரைப்படத்தில், நீங்கள் புடுங்கிய ஆணி யெல்லாமே தேவையில்லாதது என ஒரு வசனம்
வரும். அது போல் இந்நாளில் பாரதம் ஒரு சஸ்வத் ராஷ்டிரா - ஓர் அறிமுகம் என்பதில்
மீண்டும் பாரதத்தைப் பற்றித் தொங்கியிருக்கிறார்கள்.
முதல்
அலகில் இந்தியப் பிரிவினை - இந்திய விடுதலை ஆகியவற்றில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இயக்கங்களின் பங்கு எனும் தேவையற்ற விமரிசனத்திற்குரிய ஒரு கருத் துத் திணிப்பைச் செய்துள்ளனர். வேண்டாமல் காங்கிரஸ் கட்சியையும், கம்யூனிஸ்ட் கட்சியையும் இணைத்துச்
சேர்ந்திருப்பது மாணவர் மனதில் நஞ்சை விதைக்கும் சங்கிகளின் உள்நோக்கம் உடையது.
பாரதம்
என்பதையே கண்டிக்கிறோம். இதில் இந்தியா விற்கு வாயில் நுழையாத, வாந்திவரும் சஸ்வத் ராஷ்டிரா வேறா? கண்டனம் தெரிவிப்பது மட்டுமில்லை. ஏற்கவும் முடியாது.
தாள்
12 - இந்தியப் பண்பாடு - மரபு
(இந்தியக்
கலாச்சாரம், பாரம்பரியம்!)
இப்பாடத்திட்டம்
மூன்றாம் அலகில் இந்தியப் பண்பாடு இராமாயணம், மகாபாரதம் என்று கூறி இந்திய நாட்டின் சிறப்பு மிக்க தமிழ், வங்காளி, மராட்டி, தெலுங்கு மொழி இலக்கியங்கள் பற்றிக் குறிப்பிடாதது நடுநிலையின்மைக்கு எடுத்துக்காட்டு.
இவர்கள்
மதவாதிகள் - மதவெறியர்கள் - பஜனை கோஷ்டியினர் என்பதற்கு இப்பாடத்தின் நான்காம் அலகும் ஓர் எடுத்துக்காட்டு.
இதில்
பரத நாட்டிய சாஸ்திரம், இந்திய பாரம்பரிய நடனங்கள், பொம்மலாட்டத்துடன் - பஜனைகள், வேத மந்திரங்கள் ஆகியவை ஒரு சாராருக்கு மட்டுமே வேண் டிய பஜனையையும், வேத மந்திரங்களையும் சேர்த்தி ருப்பது கருத்துத் திணிப்பு. அனைத்துச் சமயங்களையும், சமுதாயங்களையும் உடைய பன்முக இயல்புடைய இந்திய மக்கள் மீது திணிக்கும் முயற்சி அல்லாது வேறு என்ன?
இந்திய
வரலாற்றை முழுமையாகப் பிரதிபலிக்காத ஒரு சார்புடையது என்பதற்குத் தாள் நான்கு, தாள் அய்ந்து, தாள் ஆறு என மூன்று தாள்கள்
ஒதுக்கியிருப்பது ஒரு சான்று. டில்லிக்கு மட்டும் மூன்று, பிறமாநில வரலாறு களுக்கும் தமிழ்நாட்டு
வரலாற்றுக்கும் கூட ஒரு தாள் இல்லை எனில், எவ்வளவு ஒரு சார்ந்த நிலை என்பதைப் படிப்போர் உணர்வர்.
தாமரை
மலர இப்படி ஒரு கீழ்த்தர உத்தி
தாள்
இரண்டில் இந்தியக் கலைகள் அறிமுகம் என்னும் பாடத்தில் (பக்கம் 91) தாமரைக் கோயில் என ஒரு பாடம்
உள்ளது.
பாரதிய
ஜனதா கட்சியின் சின்னமான தாமரை பற்றியும், தாமரையை அடிப்படையாகக் கொண்ட தாமரைக் கோயிலைப் பற்றியும் பி.ஏ. படிக்கும்
மாணவர்கள் பாடமாகப் படிக்கவேண்டும் என்று மறைமுகமாக அல்ல, நேரடியாகவே கட்டாயப் படுத்துவது இந்திய அரசியல் சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது. தாமரையைத் திணிக்க ஏன் இப்படி ஓர் அற்பமுயற்சி.
பி.ஜே.பி.யின்
மதவெறிக்கு அளவே இல்லையா? எல்லையே இல்லையா?
தாடிக்கு
ஒரு சிகைக்காய் தலைக்கு ஒரு சிகைக்காயா?
இது
தந்தை பெரியார் கேட்ட கேள்வி. இன்று எல்லா நடவடிக்கைகளிலும் பி.ஜே.பி.யைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வியாகியுள்ளது இன்று.
கரோனா
தடுப்பு மருந்து மய்ய அரசுக்கு ரூ.150/- மாநில அரசுகளுக்கு ரூ.300/- தனியாருக்கு ரூ.1200. இதைப் போலவே வரலாற்றுக் கல்விப் பாடத்திட்டம் இருக்கிறது.
பன்னிரண்டாம்
வகுப்புப் படித்து பி.ஏ.வகுப்பில்
வரலாறு படிக்கும் எல்லா மாநில மாணவர்களுக்கும் குமரி முதல் காஷ்மீர் வரை ஒரே பாடத்திட்டம் இருக்க வேண் டும். அவர்களுடைய ஒரே நாடு, ஒரே ரேஷன், ஒரே மதம் கொள்கைப்படி ஒரே பாடத்திட்டம் இருக்கவேண்டுமே, அதுதான் இல்லை.
மத்திய
அரசு இளங்கலை மாணவர்களுக்கு ஒரு பாடத்திட்டம், இளங்கலை வரலாறு ஆனர்சு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் தனியாக ஒரு பாடத்திட்டம், இளங்கலை வரலாறு இறுதியாண்டு படிக்கும் மாணவர் களுக்கு ஒரு பாடத்திட்டம்.
இப்பாடத்திட்டங்களுக்குள்ளேயே
முரண்பாடுகள் நிறைய இருக்கின்றன. இவற்றில் இடம் பெற்றுள்ள பல கருத்துகள் மனிதகுல
நலனுக்கும், இந்திய இறையாண் மைக்கும், அரசியல் அமைப்பிற்கும், சமத்துவத்திற்கும், எவ்வகையிலும் மாணவச் செல்வங்களின்நலனுக்கும் எதிரானவை என்பதால் கல்வியாளர்கள், நாற்பது ஆண்டுகள் வரலாறு போதித்த பட்டறிவு படைத்தவர்கள் என்பதால் கண்டனக் குரல் எழுப்பாமல், கண்டனத்தைப் பதிவு செய்யாமல் இருக்க முடியாது.
மாணவர்களிடையே
ஜாதி வேற்றுமையை - பார்ப்பன மேலாதிக்கத்தை வளர்க்கச் செய்யும் முயற்சியைக் கை கட்டி, வாய்
பொத்திப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
தாள்
அய்ந்து - இந்திய வரலாறு II (750-1206) எனும் பாடத்தில் அலகு இரண்டில் பிராமணர்கள் என்று பார்ப்பனர்கள் பாடமே உருவாக்கி இருக்கிறார்கள் என்றால் எவ்வளவு நெஞ்சழுத்தம், துணிவு இருக்க வேண்டும்?
அதே
அலகு மூன்றில் ஜாதிகள் தீண்டத்தகாதவர்கள் நிலை எனக் குறிப்பிட்டு, தீண்டாமையை ஏற்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் வள்ளுவக் கோட்பாட்டைச் சிதைத்து, பிறப்பால் ஒரு ஜாதி மேல் ஜாதி, ஒரு ஜாதி கீழ் ஜாதி - தீண்டத்தகாதது எனும் வருண பேதத்தை வருணாசிரம சாஸ்திரத்தைத் திணிக்கப் பெற்றுள்ளது.
இத்தோடு
விட்டார்களா? இன்னும் இருக்கிறது. அதே அலகில் அடுத்து வருணாசிரமத்தில் மலைவாழ் மக்களின் நிலை என ஒரு பாடம்
உள்ளது. இது படிக்கும் மாணவர் களிடையே மட்டுமல்ல, சமுதாயத்திலேயே வருணா சிரமத்தை மீண்டும் திணிக்கும், மாணவர் நலனுக்கும் நாட்டு நலனுக்கும் எதிரான முயற்சி.
எந்தெந்த
மாநில மாணவர்களுக்கு என்ன கற்பிக்க வேண்டும்? என்ன தேவை என்பது தெரிந்து பாடத்திட்டம் உருவாக்குவது அந்தந்த மாநிலக் கல்வியாளர்களின் உரிமை. 150 ஆண்டுகாலப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு போதும் டில்லியிலிருந்து பாடம் திணிக்கப்பெற்றது இல்லை.
அந்தந்தப்
பல்கலைக் கழகக் கல்வியாளர்கள் அடங்கிய பல்கலைக் கழகங்களின் பாடத் திட்டக் குழுக்கள் (க்ஷடியசன டிக ளுவரனநைள) தான் அந்தந்தப் பல்கலைக்
கழகங்களுக்கு வேண்டிய பாடத் திட்டங்களைச் சுதந் திரமாக உருவாக்கி நல்ல முறையில் செயலாக்கி வருகின்றன.
இன்று
எங்கேயோ 2000 மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு நாட்டு நிலவரம் தெரியாமல் மாண வர்களின் நலனுக்கு எதிராகவும், கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும், பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியைப் பறிக்கும் வகையிலும் மேற்கொள்ளும் பா.ஜ.க.
அரசைக் கண்டிக்கிறோம். கல்வியாளர்களின் ஆதரவோடு போராடவும் நேரிடும் என்பதால் இந்த இளங்கலை வரலாறு பாடத்திட்டம் திரும்பப் பெற்றாக வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
பேராசிரியர்
ஆ. ராமசாமி
பேராசிரியர்
ந.க. மங்களமுருகேசன்
No comments:
Post a Comment