வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம்
பேராசிரியர்
வெள்ளையன் 49ஆம் ஆண்டு நினைவு ஆய்வு 3 பொழிவுகளையும் காணொலியில் கேட்டேன்
சுயமரியாதை
இயக்கம்-நீதிக்கட்சி-பொதுவுடைமை இயக்கம் "தந்தைபெரியார் தந்த அரிய விளக்கமும் இன்றைய தொடர்ச்சியும்" என்ற தலைப்பில் தாங்கள் ஆற்றிய உரை வழிகாட்டுதல்
உரையாக அமைந்தது.
காரியவீரர்,
கொள்கைவீரர்
பெரியார்
ஒரு காரிய வீரரே தவிர, வெறும் கொள்கை வீரரல்ல. கொள்கையை சொல்பவர்கள் வண்டிவண்டியாக இருக்கிறார்கள். கொள்கையை சொன்னவர் தன் வாழ் நாளிலேயே சாதித்து வெற்றிகண்டவர் பெரியார் என்பதற் கான விளக்கம் அருமை. கோழை, துரோகம் என்பதற்கான விளக்கம் துணிவுடைமை என்பது எது? கருத்து ஒருமித்த வர்களுடன் கலந்து தொண்டாற்றுவதே துணிவுடமையும், அறிவுடமையும் ஆகும். கருத்து ஒருமித்தவர்களே அய்யாவின் உயிர்த் தோழர்கள். வேறுபாடு உடையவர்கள் மற்றவர்களே ஆவார்கள் என்பதற்கான விளக்கம், எது களை? எது பயிர்? என்று பிரித்துப் பார்க்கத்தெரிய வேண்டும். அதற்கான விளக்கம் தமிழ்நாட்டில் பார்ப்பனர் கள் இனி ஆட்சியாளராக வரமுடியாது. அப்படி வர நேர்ந்தாலும் பெரியார்
கொள்கைப்படிதான் ஆட்சி செய்ய முடியும் என்பதற்கு வரலாற்று ஆய்வாளர் சுப்ரமணியன் அவர்கள் எழுதிய நூலிலிருந்து எடுத்துக்காட்டிய விளக் கம். தந்தைபெரியார் எந்த அளவிற்கு அடித்தளம் அமைத் துள்ளார் என்பற்கு மேலும் வலிமையாக அமைந்தது.
திரிபுவாதிகளிடமிருந்து
பெரியாரை பாதுகாக்கும் பணியில் ஆசிரியர் அவர்கள் தன்னை முழுமையாக ஒப்படைத்து அவருடைய பேச்சுக்கள், எழுத்துக்களை ஆவணப்படுத்துவது, அய்யா அவர்களின் கருத்துக்கு மேலும் உரம் சேர்க்க பல்வேறு ஆதாரங்களை பல தளங்களில் திரட்டி
உரையாக வழங்கும்முறை இளை ஞர்களுக்கு ஊக்கமாக, வழிகாட்டுதலாக அமைந்தது
திராவிடம்
வெல்லும் என நாம் சொன்னது
வெறும் வார்த்தைகள் அல்ல, விருப்பமல்ல, ஆசை அல்ல. அது ஒரு தத்துவம், அறிவியல் என திராவிடத்துக்கு தாங்கள் தந்த
விளக்கம் அருமை.
கழகத்தோழாகள்,
இயக்க செயல்பாட்டாளர்கள், பேச் சாளர்கள், இயக்கத்தை நடத்துபவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என அய்யா சொன்ன
கருத்துகளை விளக்கி உரையாக வழங்குவது இளைஞர்களுக்கு வழிகாட்டும், நெறிப்படுத்தும் விதமாக
அமைந்தது.
தந்தைபெரியாரை
பார்க்காத என்னை போன்ற இளைஞர்கள் பெரியாரால் அடையாளம் காட்டப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் காலத்தில் வாழ்கிறோம், அவர் தலைமையின்கீழ் பணியாற்றும் பெரும் வாய்பை பெற்றது வாழ்க்கையில் பெற்ற பெரும் பேறாகக் கருதுகிறோம் .
தந்தைபெரியாரின்
தொண்டராக இருப்பதில் எனது முதுகை நானே தட்டிக்கொள்கிறேன் என அடிக்கடி தாங்கள்
கூறுவதுபோல், தங்களின் கீழ் பணியாற்றும் பெரும்வாய்ப்பு கிடைத்தமையை எண்ணி எங்களது முதுகை நாங்களே தட்டிக்கொள்கிறோம்.
நன்றி
அய்யா...
அன்புடன்
இரா.ஜெயக்குமார்
பொதுச்செயலாளர்,
திராவிடர் கழகம்
No comments:
Post a Comment