காரைக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் உறுப்பினருக்கு கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 7, 2021

காரைக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் உறுப்பினருக்கு கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து

காரைக்குடி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.மாங்குடி அவர்களுக்கு மண்டலத் தலைவர் சாமி.திராவிடமணி தலைமையில் மாவட்ட தலைவர் .அரங்கசாமி மாவட்ட செயலாளர் கு.வைகறை, நகர தலைவர் .செகதீசன், நகர் துணை தலைவர் வீ.பாலு, கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, .திருமேனி உள்ளிட்ட தோழர்கள் பொன்னாடை அணிவித்து கழகத் தலைவர் ஆசிரியர்அவர்கள் சார்பில் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர் செழியன் தங்க மாளிகை உரிமையாளர் மா.இளஞ்செழியன் விடுதலை சந்தாவினையும், கண்ணந்தங்குடி மேலையூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாதவன்  விடுதலை சந்தாவினையும் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். உடன் மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.வெங்கடேசன், மாநகர .. செயலாளர் மா.லெட்சுமணசாமி

(04-05-2021, தஞ்சாவூர்)


No comments:

Post a Comment