செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 20, 2021

செய்தியும், சிந்தனையும்....!

யாருக்குக் கசப்பு?

*         கல்வி தொடர்பான மத்திய அரசின் கலந்துரையாடலில் மந்திரிகள் மட்டத் திலான ஆலோசனை நடத்தாததால் தமிழக அரசு கடுப்பு.

- ‘தினமலர்', வெளியிடும்

தலைப்புச் செய்தி

>>           கடுப்பல்ல - உரிமையின் வெளிப்பாடு - தினமலருக்குத்தான் கடுப்பு - காரணம் தெரிந்ததே!

செய்து பாருங்கள் தெரியும்

*            புதிய கல்வியை  அடுத்த மாதம் அமல்படுத்துவார்களாம்!

>>           வினாச காலே விபரீத புத்தி!

காலம் மாறுது

*           .பி.யில் திருமணம் - திருமண மேடையில் மணமகளுக்கு ஒரு சந்தேகம். மணமகன் படித்தவனா என்று சோதிக்க இரண்டாம் வாய்ப்பாடு சொல்லச் சொல்லி இருக்கிறார். மாப்பிள்ளைதிருதிரு' வென்று விழித்துள்ளார். விளவு திருமணம் நின்றது.

>>           அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்ற காலம் போயே போச்சே!

ஒழுக்கம் கெட்டால் தண்டனைதான்!

*            திரிணாமுல் காங்கிரசில் இருந்து பா...வுக்கு நான்தானே முன்னாலேயே வந்தேன். எனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கொடுக்காமல், எனக்குப் பிறகு வந்த சுதேந்து அதிகாரிக்குக் கொடுப்பதா?

- முகுல்ராய் கேள்வி

>>           , கட்சி தாவுவதில்கூட சீனியாரிட் டியா?

நாமக்' கடவுளின் ஊழியர் ஆயிற்றே!

*           ஓராண்டுக்குமுன் உயிர் இழந்த திருப்பதி தேவஸ்தான ஊழியர் வீட்டில் கட்டுக் கட்டாகப் பணம்.

>>           பணம்பாதாளம் வரை' பாயும்!

அடங்காவிட்டால் அடக்கு!

*         சென்னையில் 3082 வாகனங்கள் பறிமுதல்.

>>           உனக்காக - எல்லாம் உனக்காக - இந்த உயிரும், உடலும் இருப்பது உனக்காக' - இது ஒரு பாடல்.

உயிருடன் விளையாட்டா?

*            போலி ரெம்டெசிவர் மருந்தால் மருத்துவர் உயிரிழப்பு. மருத்துவமனைமீது நடவடிக்கை.

>>           கோவில் ஒரிஜினல் சிலைகளையே திருடிவிட்டு, அதற்குப் பதிலாக போலி சிலைகளை வைக்கும் நாடாயிற்றே!

அருமருந்தன்ன யோசனை?

*            கிராமப்புறங்களிலும் காய்ச்சல் அதிகரிப்பு - நடமாடும் மருத்துவமனைகள் அவசியம்.

- கே.பாலகிருஷ்ணன்,

சி.பி.எம். மாநில செயலாளர்

>>           நல்லா இருந்த கிராமமும் கெட்டுப் போச்சே!

No comments:

Post a Comment