கரோனா பரவலை கட்டுப்படுத்தும் - தடுப்பூசி, மருந்துக்கு ஜிஎஸ்டி விலக்கு தேவை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 14, 2021

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் - தடுப்பூசி, மருந்துக்கு ஜிஎஸ்டி விலக்கு தேவை!

 பிரதமர் மோடிக்கு முதல்வர் மு..ஸ்டாலின் கடிதம்

 சென்னை, மே 14 கரோனா பரவலைக் கட்டுப்படுத்தப் பயன்படும் தடுப்பூசிகள், மருந்துகள் ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் மு..ஸ்டாலின் வலியுறுத்தி யுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு முதல்வர் நேற்று (13.5.2021) எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்றால் அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றை கட்டுப் படுத்த தேவையான தடுப்பூசிகளையும், மருந்து களையும் மாநிலஅரசுகள் கொள்முதல் செய்து வருகின்றன. இதைக் கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவைகள் வரி) கவுன்சிலுடன் கலந்துபேசி, இந்தப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறிப்பிட்ட காலத்துக்கு பூஜ்ய சதவீதம் என நிர்ணயிக்க வேண்டும்.

கரோனா தொற்றால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டு, மாநில அரசுகளின் வரி வருவாய் வளர்ச்சி பெருமளவு குறைந்துள்ளது. அதை ஈடு செய்ய 3 நடவடிக்கைகளை மத்திய அரசு மேற் கொண்டு மாநில அரசுகளுக்கு உதவ வேண்டும்.

அதன்படி, நிலுவையில் உள்ளஜிஎஸ்டி இழப்புத் தொகைகளையும், மாநில நுகர்பொருள் கழகங் களுக்கு வழங்க வேண்டியுள்ள அரிசி மானியத் தையும் உடனே விடுவிக்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் மீதான கூடுதல்மேல் வரி விதிப்பால் மத்திய அரசுக்கு கிடைத்துள்ள வருவாய் மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படாத நிலையில், கரோனா தொற்றால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பீட்டை ஈடுசெய்ய சிறப்பு நிதியுதவி அளிக்கப்பட வேண்டும்.

இக்காலத்தில் ஏற்பட்டுள்ள கூடுதல் செல வினங்களை மேற்கொள்ள தேவைப்படும் நிதியைத் திரட்ட அனுமதிக்கப்பட்டுள்ள கடன்வாங்கும் அளவை மாநிலத்தின் உற்பத்தி மதிப்பில் 3 சதவீதம் என்ற அளவில் இருந்து மேலும் ஒரு சதவீதம் உயர்த்த வேண்டும்.

இவ்வாறு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment