ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்!
11.5.2021 ‘விடுதலை'
நாளிதழில் வெளியான ஆசிரியர் அறிக்கையும், காணொலிக் காட்சி வாயிலாக விடுத்த செய்தியையும் வாசித்தேன். தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று தி. மு. க வென்று, ‘‘திராவிடம்
என்றும் வெல்லும்'' என்பதை மெய்ப்பித்துள்ளது. அதன்படி தாய்க் கழகம் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தது.
தாயின் கடமை சேயின் வளர்ச்சியை ஊக்குவித்து வளர்த்தெடுப்பது தான்.
ஒரு பிள்ளையை கவனிக்கும் போது அடுத்த பிள்ளையையும் வளர்ச்சி அடைய நினைப்பது தான்.
அதன்
கடமையாகத்தான் புதுச்சேரியில்
பா. ஜ. க. நிலைகளை
ஆரம்பத்திலேயே கண்டறிந்து பாசிச விசச் செடிகளை களைய, மானமிகு ஆசிரியர் அவர்களின் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது.
தமிழகத்தின்
வெற்றியை புதுச்சேரியிலும் நிலைநிறுத்த வேண்டும் என்பதில், திராவிட மற்றும் மனிதநேயம் வெல்லவேண்டும் என்பதில் மானமிகு ஆசிரியர் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனை போற்றுதலுக்குரியது.
தேசம்
முழுதும் மனிதநேயம் தழைக்க திராவிடர் கழகம் என்றும் களப் பணியாற்றும். பணியில் தொய்வு எப்போதும் இல்லை என்பதை ஆசிரியர் தமிழர் தலைவர் மெய்ப்பித்துள்ளார்.
தமிழக
தேர்தலில் தோல்வி அடைந்து, பா.ஜ.க.வை சட்டசபையில் நுழைய
வைத்த அ.தி.மு.க.வின் நிலையை
கண்டு, அக்கட்சியின்மீதும் தனது தாய்ப் பாசத்தோடு வேண்டுகோள் வைத்து மதவெறி பா. ஜ.க.விலிருந்து
மீள வேண்டும் என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கை சாலச் சிறந்தது.
பதவியின்
மூலம் மதவெறி, இனவெறி பரவுவதை திராவிடர் கழகம் ஒருபோதும் எதிர்க்கத் தயங்காது, என்பதை ஆசிரியர் அவர்கள் தமது சிந்தையை விதைத்துள்ளார்.
பகுத்தறிவுப்பகலவன்
அடியொற்றி என்பதை மெய்ப்பித்துள்ளார்.
திராவிடம்
என்றும், எப்பொழுதும் வெல்ல அய்யா தந்த புத்தியோடு களம் காண்போம், வெல்வோம்!
அன்புள்ள
கழகத்தொண்டன்,
மு.
சு. அன்புமணி, மதுரை
No comments:
Post a Comment