சாலையோர ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 28, 2021

சாலையோர ஆதரவற்றோருக்கு உணவு வழங்கல்

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி. வீரமணி அவர்களின் அறிவுறுத்தலின் படி  சேலம் மாவட்ட  தலைவரும்,சேலம் குகை கருங்கல் பட்டி ஜே.வி. சிறுதொழிற் குழுமங்களின் நிறுவனருமான பெரியார் பெருந்தொண்டர் கி.ஜவகர் ஏற்பாட்டில் கரோனா கால ஊரடங்கையொட்டி சேலம் மாநகரில், கருங்கல் பட்டி,பிரபாத், திருச்சி மெயின் ரோடு, கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள சாலையோர ஆதரவற்றோருக்கு  மதிய உணவு தயார் செய்து வழங்கப்பட்டது.  இந்நிகழ்வை ஜே.வி.தொழிற் நிறுவன உரிமையாளர்  விசாலாட்சி அம்மா,  உமாமகேஸ்வரி பாஸ்கர் தாஸ், காமராஜ், அரவிந்த், சேலம் மாவட்ட  அமைப்பளர் .வெ. இராவணபூபதி, கருங்கல்பட்டி வெங்கடேஷ், ஜே.வி. நிறுவன ஊர்தி ஓட்டுநர் தர்மலிங்கம் ஆகியோர் முன் நின்று உதவி, உணவுப் பொட்டலங்களை வழங்கினர்.

No comments:

Post a Comment