தாராபுரம்,
மே. 18- திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தி லுள்ள தந்தை பெரியார், அறிஞர் அண்ணா சிலைக ளுக்கு அமைச்சர்
பெரு மக் கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தாராபுரத்தில்,
கரோனா தடுப்பு பணி தொடர்பான ஆய்வு மற்றும் குடும்ப அட்டை தாரர்களுக்கு கரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்குதல் தொடர்பான மக்கள் பணிகளில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ் ஆகியோர் 15.5.2021 அன்று பங்கேற் றனர். முன்னதாக தாராபுரம் தீவுத்திடலிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கும், தாரா புரம் முன்னாள் நகராட்சி அலுவலகம்
அருகேவுள்ள அறிஞர் அண்ணா சிலைக் கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
திருப்பூர்
வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இல.பத்மநாபன், தாராபுரம்
கழக மாவட்ட செயலாளர் க.சண் முகம்,தாராபுரம் நகர தலை வர் மு.சங்கர், தாராபுரம் நகர
திமுக செயலாளர் கே.எஸ்.தனசேகர்,
திமுக வழக்கறிஞரணி மாவட்ட
அமைப்பாளர் க.செல்வ ராஜ்,
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரபாவதி, சரஸ்வதி உள்ளிட்ட மதச் சார்பற்ற முற்போக்கு கூட்ட ணியை சார்ந்தவர்கள் பங் கேற்றனர்.
கழகத்தின்
சார்பில் பயனாடை
செய்தித்துறை
அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வ ராஜ், திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக பொறுப் பாளர் இல.பத்மநாபன், தாரா
புரம் நகர திமுக செய லாளர் கே.எஸ்.தனசேகர்
ஆகியோ ருக்கு திராவிடர் கழகம் சார் பில் பயனாடை வழங்கி சிறப்பு செய்யப்பட் டது.

No comments:
Post a Comment