திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: மராத்திய மக்கள் இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற அமர்வு, அண்மையில் வழங்கிய தீர்ப்பு, சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் எதி ரான பேராபத்தை விளைவிப்ப தாகும். இதுவரை பெற்று வந்த உரிமைகளை எல்லாம் தகர்ப்பதாகும். இந்த பேராபத்திலிருந்து சமூக நீதி பறிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட தமிழக அரசும், எம்.பி.,க்களும், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராடி, சமூக நீதியை மீட்க வேண்டும்.
'டவுட்'
தனபாலு: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் இடம் கிடைக்கவில்லை; இடம் கிடைத்த வர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை என, பிரச்னை பூதாகரமாக நாடு முழுதும் வெடித்து வருகிறது. இந்த நேரத்திலும் இட ஒதுக்கீடு, சமூக
நீதி என பேச, உங்களை
போன்றவர்களுக்கு எப்படி தான் மனம் வருகிறதோ... சாதாரண மக்கள் வேறு, அரசியல்வாதிகள் வேறு என்பது உண்மை தானோ என்ற, 'டவுட்' வருகிறது!
- தினமலர்,
12.5.2021
கரோனா
காலத்தில்தானே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. - அதைக் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டுமா? கரோனா காலத்தில் சிறீரங்கம் பெருமாளுக்கு தேரோட்டம் ஏன்? சிறீரங்கம்
பெருமாளுக்குச் சாற்றுவதற்கு
சிறீவில்லிபுத்தூரிலிருந்து
ஆண்டாள் பட்டு எதற்கு? (சிறீரங்கம் பெருமாளுக்கு சிறீவி., ஆண்டாள்பட்டு என்று 8.5.2021 தினமலரில் செய்தி வெளிவந்துள்ளது.)

No comments:
Post a Comment