லேசான தொற்றை குணப்படுத்தும் கபசுரக் குடிநீர்: ஆராய்ச்சியில் உறுதியானதால் ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 13, 2021

லேசான தொற்றை குணப்படுத்தும் கபசுரக் குடிநீர்: ஆராய்ச்சியில் உறுதியானதால் ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை

சென்னை, மே 13 அறிகுறி இல்லாத, லேசான, மிதமான கரோனா தொற்றை கபசுரக் குடிநீர் குணப்படுத்துவது ஆராய்ச்சியில் உறுதியானதால், அதைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கரோனா தொற்றுக்கு தொடக்கத்தில் ஆங்கில மருத்துவம் மூலம்சிகிச்சை அளிக்கப்பட்டது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதால், லேசான, மிதமான தொற்று இருப்பவர்களுக்கு சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் சித்த மருத்துவ மய்யங்கள் அமைக்கப்பட்டு, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கபசுரக் குடிநீர் உள்ளிட்ட சித்தமருந்துகளால் ஆயிரக்கணக்கானோர் தொற்றில் இருந்து மீண்டனர்.

இந்நிலையில், கரோனா 2ஆவது அலை தீவிரமடைந்து வருவதால், சித்த மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு சித்த மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கலை, அறிவியல் கல்லூரியில் 240 படுக்கைகள், மீனம்பாக்கம் .எம்.ஜெயின் கல்லூரியில் 70 படுக்கைகளுடன் சித்த மருத்துவ சிகிச்சை மய்யங்களை தமிழக அரசு அமைத்தது.

இதேபோல, மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் தாம்பரத்தில் செயல்படும் தேசிய சித்த நிறுவனமருத்துவமனையில் 100 படுக்கைகளுடன் சிகிச்சை மய்யம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், தருமபுரி, தேனி,நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, அரியலூர், மதுரை, தென்காசி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் தமிழக அரசு சித்த மருத்துவ மய்யங்களை அமைக்க உள்ளது.

இந்நிலையில், அறிகுறி இல்லாத,லேசான மற்றும் மிதமான தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கபசுரக் குடிநீர்மூலம் குண மடைவது, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம்நடத்திய ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதேபோல, ஆயுஷ்-64 என்ற ஆயுர்வேத மருந்து தொற்றைக்குணப்படுத்துவதும், மத்திய ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இந்த 2 மருந்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தேவையானவர்களுக்கு கொடுக்கவும் மாநில அரசுகளுக்கு, மத்திய ஆயுஷ் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

எட்டு வழி சாலை, ஹைட்ரோகார்பன் திட்டங்களை அனுமதிக்கமாட்டோம்: அமைச்சர் உறுதி

சென்னை, மே 13  சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம், அய்ட்ரோகார்பன் திட்ட விவகாரங்களில், அவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்கிறது என்று அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் நேற்று (12.5.2021) ஆய்வு மேற்கொண்டார். பூங்கா வளாகத்தில் மாங்கனி மரக்கன்று நடவு செய்தஅமைச்சர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

2010இல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது, கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டின் நினைவாக, சென்னையில் ரூ.8 கோடியில் 7.92 ஏக்கரில் செம்மொழிப் பூங்காவை உருவாக்கினார். மக்கள் தொகை நெருக்கம் அதிகமுள்ள சென்னையில் இதுபோன்ற பூங்காக்கள் தேவை. தோட்டக்கலைத் துறை மூலம் 24 பூங்காக்கள் தமிழகம் முழுவதும் பராமரிக்கப் படுகின்றன.  புதிய வேளாண் சட்டங்களை தடை செய்வது தொடர்பாக, ஆராய்ந்து உரிய முடிவு மேற்கொள்ளப்படும்.  சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டம், அய்ட்ரோகார்பன் திட்ட விவகாரங்களில், அவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்கிறது.  இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment