திராவிடம் வென்றது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 15, 2021

திராவிடம் வென்றது

முத்திப் போன வெறியர்கள்

தத்தி என்றனர் இவரை அன்று

கத்தி என புரிய வைத்தார் இன்று !

 

சுடலை என்றோரையும்

விடலை இவர்

வேட்டையை முடித்தார்

கோட்டையை பிடித்தார் !

 

முதல்வராகவே முடியாது என்று

ஜோதிடம், ஜாதகம் பெயரால்

கட்டம் சரியில்லை என்றனர் - சொன்னவர்

விட்டம் பார்க்க வீட்டிற்கு சென்றனர் !

 

வெற்றிவேல் வீரவேல் என்று

வெறி கொண்டு கிளம்பினார்கள் சத்தமாய்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

முடித்து விட்டார் அவர்களை மொத்தமாய் !

 

இலட்சிய வழியில் போர் தொடுத்தார்

இனப் பகைக்கு விடை கொடுத்தார்

பத்தாண்டு இருள் கிழித்த பரிதி

இனி எப்போதும் அவர் ஆட்சி உறுதி !

 

ஊடகமும் தேர்தல் ஆணையமும்

ஊரில் உள்ள எல்லாக் கட்சிகளும்

மறைமுகமாய் ஓரணியில் நின்றது

இறுதியில் திராவிடம் தான் வென்றது !

பொறுப்பேற்று சிறப்பார் பலர் - இவர் போல்

சிறப்போடு பொறுப்பேற்றார் எவரும் இலர் !

 

திசையெட்டும் பரவிடும் ஒளியாய்

திக்கற்றவர்க்கு சரியான வழியாய்

திராவிடம் காத்திடுவார் விழியாய் !

 

வறியோரின் வயிற்றுக்கு பாலாய்

வலுவுள்ள கைகளுக்கு வேலாய்

பெருந்தொற்று காலத்து மருந்தாய்

கடும்பசி நேரத்து விருந்தாய்

வந்தார் தளபதி முதல்முறை

வாழ்த்திடும் எங்கள் தலைமுறை !!

 

- இராம. வைரமுத்து

கழக வழக்குரைஞர், மதுரை

No comments:

Post a Comment