செய்யாறு, மே 7 தமிழக சட்டமன்ற தேர்தலில் செய்யாறு தொகுதியில் தி.மு.க.வின் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற ஓ.ஜோதி அவர்களுக்கு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், மாவட்ட தலைவர் அ.இளங்கோவன், மாவட்டசெயலாளர் பொன்.சுந்தர், செய்யாறு நகர தலைவர் தி.காமராஜ் ஆகியோர் சால்வை அணிவித்து 'அய்யாவின் அடிச்சுவட்டில்' புத்தகம் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
உடன் பொதுக்குழு உறுப்பினர் மு.கோவிந்தன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வி.வெங்கட்ராமன், நகர செயலாளர் தங்கம் பெருமாள், வடமணப்பாக்கம் மு.வெங்கடேசன், து.எல்லப்பன், கஜபதி, வெ.இளஞ்செழியன், இளைஞரணி தலைவர் சீனுவாசன், பெரியார் பிஞ்சு சம்யுக்தா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

No comments:
Post a Comment