ஆசிரியருக்குக் கடிதம் - காணொலியில் தமிழர் தலைவர் உரை மிக அருமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 17, 2021

ஆசிரியருக்குக் கடிதம் - காணொலியில் தமிழர் தலைவர் உரை மிக அருமை

அன்பு நிறை ஆசிரியர் அவர்களுக்கு:

வணக்கம். இன்றைய (15.5.2021) தங்களின் "The Dravidian Model" உரை மிகச் சிறப்பு. “திராவிடம்என்ற சொல்லுக்கான ஆழமான பொருளையும், காரண காரியங்களையும் விளக்கி, புத்தகத்தின் அத்தியாயங்கள் வாரியாக விளக்கியது மிக அருமை.  தங்களது அறிவாற்றல், அனுபவம், படிப்பு - உரை கேட்டோர் அத்தனை பேரும் உணர்ந்து மகிழ்ந்தோம். ஒரு மணி நேர உரையில் எழுச்சி மிகு செய்திகள் பல. அண்ணல் அம்பேத்கர் உள்ளம் உருகி வெளிப்படுத்திய மருத்துவச் செய்தியை அறிந்து நாங்களும் வர்ணாசிரம அதர்மத்தின் ஆழத்தை உணர்ந்தோம்.

Òஎனக்கு கட்சி இல்லை. கொள்கை உண்டுஎன்ற பெரியாரின் சொற்களை நினைவுபடுத்தி, காமராசரேகூட திராவிடக் கொள்கைகளுக்குச் செயல்வடிவம் கொடுத்ததை அருமையாக சொன்னீர்கள். தற்போதைய தமிழ்நாட்டில் கல்வி, பொது சுகாதாரம் உயர்ந்திருப்பதற்குதிராவிடக் கொள்கை அடித்தளம்எந்த அளவுக்கு காரணம் என்பதையும் மிக அழுத்தமாக முன்வைத்தீர்கள். கரோனா இரண்டாம் அலையின் ஆபத்தையும், அதற்காக எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்ற தங்களின் அறிவுரையும் மிக முக்கியமானது இக்கால கட்டத்தில்!

அன்புடன்,

அரசு செல்லய்யா, மேரிலாண்ட் அமெரிக்கா


No comments:

Post a Comment