தந்தை பெரியார் பிறந்தநாள் சுவரெழுத்து பிரச்சாரம் ஒசூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 17, 2021

தந்தை பெரியார் பிறந்தநாள் சுவரெழுத்து பிரச்சாரம் ஒசூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

ஓசூர், மே 17 13.05.21 அன்று மாலை 4.30 மணிக்கு காணொலி வழியாக ஒசூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி வரவேற்று பேசினர். அதனை தொடர்ந்து கடந்த 26.04.21 அன்று ஒசூர் நகர பகுத்தறிவாளர் கழக தலைவராக பணியாற்றிய பெரியார் சுப்பிரமணி மறைவிற்கு ஒரு நிமிடம் அமைதிகாத்து வீரவணக்கம் செலுத்தபட்டது.

கூட்டத்தின் நோக்கம் குறித்து தலைமை செயற்குழு கூட்டத்தில் மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் தனது உரையில், தமிழர்தலைவர் ஆசிரியர் கூறிய கருத்துபடி ஒசூர் மாவட்டத்தில் விடுதலை ஏட்டை  வழியாக இயக்க பொறுப்பாளர்கள் பரப்புவது குறித்தும்,எதிர்வரும் செப்டம்பர் மாதம் தந்தைபெரியார் பிறந்தநாளை வெகுசிறப்பாக கொண்டாடும் விதமாக மாவட்டம் முழுவதும் தந்தைபெரியாரை பற்றிய சுவரெழுத்து பிரச்சாரம் செய்திடல் வேண்டும் என்றும், கரோனா பெருந்தொற்று ஏற்பட்டுள்ள இச் சூழ்நிலையில் கழக தோழர்கள் அவர்தம் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் முககவசம் அணிந்து பாதுகாப்புடன் இருந்திட வேண்டுமென தமிழர்தலைவர் ஆசிரியர் கரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு பேச்சுகளை அவருடைய பாதுகாப்பு முறைகளை எடுத்து சொல்லி மாவட்டத்தில் உடல் நலம் குறைவுள்ள தோழர்களை நலம் விசாரித்தும், நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற உழைத்த அத்துணை தோழர்களுக்கும், வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட மகளிரணி தலைவர் செ.செல்வி, மாவட்ட அமைப்பாளர் .முனுசாமி,மாவட்ட துணைத்தலைவர் இரா.ஜெயசந்திரன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் சிவந்தி அருணாசலம், மாவட்ட மாணவர்கழக அமைப்பாளர் .கா.சித்தாந்தன், மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, மாவட்ட தலைவர் சு.வனவேந்தன், கிருட்டிணகிரி மாவட்ட செயலாளர் கா.மாணிக்கம்,மறைந்த பெரியார் சுப்பிரமணி மகன் சு.குமார்,மாநில வழக்குரைஞர் மாணவர் கழக துணை அமைப்பாளர் .கா.வெற்றி, மாநில மாணவர்கழக அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டி ஆகியோர் கருத்துரைக்கு பின் மாநில திராவிடர் தொழிலாளர் அணி அமைப்பாளர் திருச்சி மு.சேகர்  பேசும்போது, ஒசூர் பகுதி, தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் அங்கே திராவிடர் தொழிலாளர் அணியை கட்டி அமைத்திட வேண்டும் அதற்கான ஒத்துழைப்பை புதியதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட பொருப்பாளர்கள் சி.மணி தலைவர்,செயலாளர் தி.பாலகிருஷ் ணன், அமைப்பாளர் .மு.நாவரசன் ஆகியோர் செய்திட வேண்டும் என கேட்டு கொண்டார் அவரை தொடர்ந்து மாநில அமைப்பு செயலாளர் ஊமைசெயராமன் விடுதலை ஏட்டை வழியாக எவ்வாறு எளிய முறையில் வாட்சப் மூலம் அனுப்புவது ஒவ்வொரு பொறுப்பாளர்களும் இதுநாள்வரை எவ்வளவு நண்பர்களுக்கு அனுப்பி உள்ளீர்கள் என்ற விபரத்தை தமிழர்தலைவர் ஆசிரியர் பார்வைக்கு கொண்டு செல்ல இருப்பதால் ஒவ்வொரு தோழர்களும் எனக்கோ மாநில அமைப்பாளர் குணசேகரனுக்கோ அதன் விவரத்தை அனுப்புமாறு கேட்டு கொண்டார்.

இக் கூட்டத்தில் அனைவரின் ஒத்துழைப்புடன் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

*மறைந்த பெரியார் சுப்பிரமணி அவர்களுக்கும், இதுநாள்வரை கரோனா தொற்று காரணமாக மறைவுற்ற கழக தோழர்களுக்கும் வீரவணக்கம்.

*அறிவுலக ஆசான் தலைவர் தந்தைபெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17இல் ஒசூர் மாவட்டம் முழுவதும் சுவரெழுத்து செய்வது எனவும்.

*தமிழர்தலைவர் ஆசிரியர் ஆணைப்படி விடுதலை ஏட்டை மக்கள் மத்தியில் அதிகமாக கொண்டு சேர்க்கும் விதமாக ஒவ்வொரு கழக பொறுப்பாளர்களும் தங்களுக்கு வரும்  விடுதலையை தங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்திட வேண்டும் அதன் விபரத்தை தலைமைக்கோ தெரியபடுத்திட வேண்டும்.

*தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள் இனத்தின் வெற்றி சொற்றொடரான திராவிடம் வெல்லும் அதை நாளை வரலாறு சொல்லும் என்ற முழக்கத்தை மக்கள் முன் வைத்து தமிழகம் முழுவதும் தனது வயதையும், கரோனா தொற்று காலத்தையும் பொருட்படுத்தாது சூறாவளி சுற்றுபயணம் மேற்கொண்டு திமுக ஆட்சி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும்,திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களுக்கும், ஒசூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதியிலும் வெற்றிபெற்றுள்ள மதசார் பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்  ஒய்.பிரகாஷ் திமுக, திரு. டி.ராமசந்திரன் சிபிஅய் அவர்களுக்கும் இவர்களை வெற்றிபெற வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கும்,திமுக கூட்டனி கட்சியினர்க்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறது.

இக்கூட்டத்தில் பார்வையாளராக கலந்து கொண்டவர்கள்: மாநில ..துணைத்

தலைவர் அண்ணாசரவணன்,பொதுக்குழு உறுப்பினர் .செ.செல்வம்,தஞ்சை குட்டிமணி, மேலாளர் பிரபாகரன் (ஓய்வு) விழுப்புரம் மண்டல செயலாளர் குழ.செல்வராசு,பெரியார் பெருந்தொண்டர் பரமசிவம். இக்கூட்டம் நடத்துவதற்கு காணொலி ஏற்பாடுகளை அறிவு வழி காணொலி நிகழ்ச்சி பொறுப்பாளர் தோழர் தாமோதரன் செய்திருந்தார் அவருக்கு மாவட்ட கழகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment