தருமபுரி வி.பா. ஆதவனின் படத்திறப்பு - நினைவேந்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 10, 2021

தருமபுரி வி.பா. ஆதவனின் படத்திறப்பு - நினைவேந்தல்

தருமபுரி,  மே 8,    தருமபுரி  மாவட்டக்  கழக மேனாள்  இளைஞரணி செயலாளரும், தருமபுரி நகர  கழகத் தலைவர் கரு.பாலன், மாவட்ட மகளிரணி அமைப் பாளர் விஜயா ஆகியோரது மகன் வி.பா. ஆதவன் 3-5-2021 அன்று  உடல்நலக்  குறைவால் மறைவுற்றார்.                                         

அவரது  நினைவைப்  போற்றும் வகையில்  5 .5. 2021  மாலை  4. மணி அளவில்  தரும புரியில்  உள்ள  பாலன் இல்லத்தில்  படத்திறப்பு  நிகழ்ச்சி நடை பெற்றது.  படத்திறப்பு  நிகழ்வுக்கு  தருமபுரி  மாவட்டக் கழகத்  தலைவர்   வீ. சிவாஜி  தலைமை  ஏற்று  புகழுரை ஆற்றினார்.

திராவிடர்  கழக  மாநில அமைப்புச்  செயலாளர்  ஊமை. ஜெயராமன்  வி.பா. ஆதவனின்  படத்தைத் திறந்து  வைத்து  நினைவுரை யாற்றினார்.     

இந்நிகழ்வில்  தருமபுரி  மண் டலத் கழகத்  தலைவர் தமிழ்ச் செல்வன்,  மாவட்ட. செயலாளர்  மு. பரமசிவம் , மாவட்ட பகுத் தறிவாளர் கழக  செயலாளர்  கதிர்.செந்தில், பகுத்தறிவு ஆசிரியர் 

. மணிவேல் ஆகியோர் வி.பா. ஆதவனை நினைவு கூர்ந்து பேசினர்.

இந்நிகழ்வில் விடுதலை வாசகர் வட்ட செயலாளர் சுதாமணி, ஆசிரியர் தனராஜ், குமரகுரு, கிருட்டினகிரி மாவட்ட செயலாளர் கா.மாணிக்கம், காமலாபுரம் கழகத் தோழர்கள் இரா. சின்னசாமி, இரா.ராமசாமி, இரா. ராஜா, முருகன், முத்து, பிரகாசம், குடும்பத்தினர்கள் கரு.பாலன், குமரகுரு, விஜயா, வி.பா.அறிவுக்கரசு,வி.பா.அனு, ஓசூர் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment