14.05.2021 டெக்கான் கிரானிக்கல், சென்னை:
· தமிழகத்தில் முழு அடைப்பைத் தீவிரப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆதரவு.
டெக்கான்
கிரானிக்கல், அய்தராபாத்:
· பீகார்,
உத்தரபிரதேசம் கங்கையில் ஏறத்தாழ 52 பிணங்கள் மிதப்பது பற்றி அறிக்கை அளித்திட மத்திய நீர்வளத்துறை அமைச்சகம், பீகார், உ.பி. அரசுகளுக்கு
மனித உரிமை ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது.
· இந்த
ஆண்டு மார்ச் மாதத் துவக்கத்திலேயே இன்சோகாக் என்ற மருத்துவ விஞ்ஞானிகள் கொண்ட அரசின் அமைப்பு, கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் வர இருப்பதை தெரிவித்தும்
மத்திய அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக் கையும் எடுக்கவில்லை என்பதை மூத்த ஊடகவியலாளர் கரண் தாப்பர் குறிப்பிட்டுள்ளார்.
தி
டெலிகிராப்:
· வங்காளத்தில் மம்தா குறிப்பிடத்தக்க
வெற்றி பெற்றுள்ளார். எவ்வாறாயினும்,
தமிழ்நாட்டில் ஸ்டாலினின் திமுக மற்றும் கேரளாவில் பினராயி விஜயனின் கீழ் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகியவை பாரதீய ஜனதா கட்சியின் பிளவு அரசியலுக்கு எதிரான போராட்டத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸை விட கருத்தியல் ரீதியாக வலுவூட்டப்பட்டுள்ளன.பாஜகவின் இந்து தேசிய வாதத்தை எதிர்த்துப் போராட தென்னகத்தில் எழுச்சியைத் தூண்டுவதற்கான பொறுப்பு ஸ்டாலின் மற்றும் விஜயன் மீது உள்ளது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment