கரோனா பரவலுக்கு மத்திய அரசே காரணம் முழு ஊரடங்குதான் ஒரே தீர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 5, 2021

கரோனா பரவலுக்கு மத்திய அரசே காரணம் முழு ஊரடங்குதான் ஒரே தீர்வு

ராகுல் காந்தி காட்டமான அறிக்கை



புதுடில்லி, மே 5 கரோனா பரவலுக்கு மத்திய அரசே காரணம். இதை தடுக்க நாடு தழுவிய முழு ஊரடங்கு பிறப்பிப்பதே ஒரே தீர்வு என்று ராகுல் காந்தி காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். கரோனா 2ஆவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவிவருகிறது. தினசரி பாதிப்பும் 3 லட்சத்துக்கும் மேல் உள்ளது. தினமும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர்.  இந்நிலையில், கரோனா பரவலை தடுக்க நாடு தழுவிய முழு ஊரடங்குதான் ஒரே வழி என்று என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: கரோனா விவகாரத்தில் மத்திய அரசு செயலற்று போய் இருப்பதால் பல அப்பாவிகள் உயிரிழந்து வருகின்றனர்.  கரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிப்பதுதான் ஒரே தீர்வு. ஏழைகளுக்கு குறைந்த பட்ச வருமான உறுதி திட்டத்தை அறிவித்து விட்டு ஊரடங்கை அமல்படுத்தலாம். இவ்வாறு ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி வெளியிட்ட மற்றொரு பதிவில், நாட்டுக்கு எதிரான குற்றத்தை மத்திய அரசு புரிந்துள்ளது. கரோனா வைரஸ் இந்த அளவுக்கு பரவுவதற்கு உதவியதே மத்திய அரசுதான். மத்திய அரசு கரோனாவை தடுக்க எந்த யுக்தியும் வகுக்காமல் இருப்பதால்தான், முழு ஊர டங்குதான் ஒரே தீர்வு என்று கூறி யுள்ளேன் என்று கூறியுள்ளார்.

கடந்த மக்களவை தேர்தலின் போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதிய திட்டத்தை அமல்படுத் துவோம் என்று உறுதி அளித் திருந்தது. அந்த திட்டத்தை இப் போது அமல்படுத்தினால் கரோனா ஊரடங்கால் வாழ்வா தாரம் இழந்துள்ளவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று மத்திய அரசை காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment