ஆசிரியருக்குக் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 6, 2021

ஆசிரியருக்குக் கடிதம்

தேசம் எழுதிய தீர்ப்பு

வெற்றி பெற்று விட்டது திமுக

பணபலம் படை பலம் ஆள் அதிகார பலத்தால்

வெற்றியை விலைக்கு வாங்கி விடலாம்

என்று மனப்பால் குடித்தவர்கள் வெட்கித்

தலை குனிய வந்த வெற்றி இது..

உதய சூரியச் சுடரொளிச் சூட்டில்

சுருண்டு போனது இலையும் பூவும்.

பெரியார் சிலையைச் சேதப்படுத்தியவர்கள்

திருவள்ளுவர் சிலைமேல் காவி பூசியவர்கள்

முகத்தில் கரி அள்ளிப் பூசிட விரும்பி

தேசமே எழுதிய தீர்ப்பு இது. இந்தத்

தீர்ப்பின் மூலம் தமிழை தமிழுணர்வை

அழிக்க நினைப்பவர்கள் இங்கே காலூன்ற

முடியாதென்பது நிராகரிக்க முடியாத நிசமாக

நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகி இருக்கிறது.

இமய நெற்றியில் எழுதி வைப்போம்

தேசம் எழுதிய தீர்ப்பு இதை - வெற்றிச்

சேதி இதை உலகம் முற்றும் அறிய.

 

- ஞா.மாணிக்கவாசகன் (வயது 91)

(திராவிட இயக்கப்பற்றாளர்: முதுபெரும் கவிஞர்,  தமிழ் ஆர்வலர், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி)

No comments:

Post a Comment