பெரியார் போல் புகழ்ப் பெறுவாய் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 6, 2021

பெரியார் போல் புகழ்ப் பெறுவாய்

 தளபதி மு..ஸ்டாலினுக்கு மலேசிய திராவிடர்

கழகத் தலைவர் ..அண்ணாமலை வாழ்த்து

அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றியை நிலைநாட்டிய திமுக தலைவர் மு..ஸ்டாலின் அவர்கள் தந்தை பெரியார் போல் புகழ்பெற்று வாழ வாழ்த்துவதாக மலேசியத் திராவிடர் கழக தேசியத் தலைவர் ..அண்ணாமலை கூறினார்.

ஆளும் கட்சியாக இருந்தவர்களில் குறைகளை சுட்டாமல், எதிர் கட்சியாக இருந்த திமுக மீதும், மு..ஸ்டாலின் மீதும் புழுதிவாரி தூற்றியவர்களுக்கு தமிழ் நாட்டு மக்கள் சரியானப் பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளார்கள். சரியான தருணத்தில் சரியான முடிவை எடுத்துள்ள மக்களுக்கும்  மலேசியத் திராவிடர் கழக சார்பாக நன்றிப் பாராட்டுவதாக மானமிகு ..அண்ணாமலை தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

மறைந்த தலைவர் கலைஞரிடம் அரசியல் ஞானம் பெற்று, நுண்ணறிவுக்கொண்டு மக்களின் நலனில் அக்கறையுடன்,  மொழி, இனம், பண்பாடு, சுயமரியாதை, பகுத்தறிவு என்று மக்களை அழைத்துச் செல்வதோடு, தமிழகமக்கள் வரு வாய், வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று திமுக அரசாங்கத்தையும், அதன் தலைவர் மாண்புமிகு மு..ஸ்டாலினையும் மதிக கேட்டுக்கொள்வதாக ..அண்ணாமலை கூறினார்.

திமுக ஆட்சியில் , மு..ஸ்டாலின் அவர்கள் தமிழுக்கும், தமிழ் சமூகத்திற்கும் முன்னுரிமை வழங்கி சிறப்பான ஆட்சியை செய்வார் என்று மலேசிய திராவிடர் கழகம் பெரிதும் எதிர்பார்க்கிறது. அதே வேளையில் தமிழ்ப் புத்தாண்டு சுறவம் திங்கள் முதல் நாள் என்பதை உலக அளவில் ஒரு மாநாட்டை கூட்டி, 1921 ஒன்றில் உருவாக்கப்பட்ட தமிழாண்டு முடிவை மீண்டும் உறுதிப்படுத்தி அரசாங்க பதிவில் நிலைநாட்டப்பட வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக்கொள்வதாக மலேசிய திராவிடர் கழகத் தேசியத் தலைவர் ..அண்ணாமலை, திமுக மற்றும் மு..ஸ்டாலினுக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தியில்   கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment