ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 6, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 06.05.2021 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

· இந்தியாவில் கரோனா தொற்று மூன்றாவது அலையைத் தவிர்க்க முடியாது என மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் எச்சரித்துள்ளார்.

· மராட்டியர்களுக்கு இட ஒதுக்கீடு சட்டம் செல்லாது; 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

· அரசமைப்புச் சட்டத் திருத்தம் 102இன்படி, பிற்படுத்தப் பட்டோர் யார் எனக் கண்டறியும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

தி இந்து:

· மேற்கு வங்க தேர்தலில், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் பாஜக வின் செல்வாக்கு சரிந்துள்ளது; மேலும், பெண் வாக்காளர்கள் மம்தாவின் கட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துள்ளனர்; மேலும், தமிழ் நாட்டில் பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுகவிற்கு எதிராகவும், திமுக தலைவர் மு..ஸ்டாலினுக்கு ஆதரவாகவும் மக்கள் வாக்களித்துள்ளனர்  என லோக் நிதி  சி.எஸ்.டி.எஸ். ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

· மராட்டிய இடஒதுக்கீடு செல்லாது என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் கேரள அரசு அறிமுகப்படுத்திய 10 சதவீத பொருளாதார இடஒதுக்கீடு குறித்து கேள்வியை  எழுப்பியுள்ளது.

தி டெலிகிராப்:

· கோவிட் தகவல் அமைப்பின் நம்பகத்தன்மை குறித்த .பி. அரசின் கூற்றுக்களை அலகாபாத்  உயர்நீதிமன்றம் அம்பலப் படுத்துகிறது

· .பி.யில் கோவிட் தகவல் அமைப்பின் நம்பகத்தன்மை குறித்த உத்தரபிரதேச நிர்வாகத்தின் கூற்றுக்களையும்,  மருத்துவ மனை படுக்கைகள் கிடைப்பது தொடர்பான அரசாங்க ஹெல்ப் லைன் மற்றும் இணைய செய்திகளுக்கு இடையில் உள்ள மாறுபட்ட செய்திகளையும் அலகாபாத் உயர்நீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளது.

 - குடந்தை கருணா 

No comments:

Post a Comment