"இது என்றும் பெரியார் மண்தான்" - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 27, 2021

"இது என்றும் பெரியார் மண்தான்"

கழகத் துணைத் தலைவர் உரை

மதுரை,மே 25- நெல்லை, திண்டுக்கல் மண்டல கலந்துரையாடல் கருத்தரங்கக் கூட்டம் காணொலியில் 20.5.2021 வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு  நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றும், ஒருங்கிணைத்தும் திராவிடர் கழகத்தின்  மாநில அமைப்புச்செயலாளர் வே.செல்வம் உரையாற்றினார். அனைவரையும் வரவேற்று, தலைமைச்செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காகவே இந்தக் காணொலி கலந்துரையாடல் என்றும், கலந்துரையாடல் நிகழ்வின் தொடர்ச்சியாக கருத்தரங்க உரையாக, கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் அவர்கள் உரை நிகழ்த்த இருக்கிறார் என்றும் குறிப்பிட்டு வரவேற்புரையாற்றினார்.

டேவிட் செல்லத்துரை

நிகழ்வுக்கு தென் மாவட்ட பிரச்சாரக்குழுச்செயலாளர் டேவிட் செல்லத்துரை தலைமை தாங்கினார். அவர் தனது தலைமை உரையில்விடுதலை பிடிஎப்-பினை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்புதலை முக்கியப்பணியாக செய்து வருகிறோம்.புதிய தமிழக அரசு பதவி ஏற்றிருக்கிறது. தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்,மருத்துவர்கள் அறிவுரையையும் மீறி, தனது உடல் நிலையைப் பற்றிக்கவலைப்படாமல் தேர்தல் பரப்புரை செய்தார். ஆனால் நமது கழகப்பொறுப்பாளர்கள்,மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து, அய்யாவின் உடல் நிலையைக் கவனித்தில் கொண்டு ,தேர்தல் பரப்புரை நிகழ்வினை அமைத்தார்கள். திராவிடம் வென்றிருக்கிறது.நமது பொறுப்பாளர்களுக்குப் பாராட்டுகள்.தந்தை பெரியார் பிறந்த நாள்-சுவரெழுத்துப்பிரச்சாரம் மிகச்சிறப்பாக செய்கின்றோம்.

தோழர்களுக்கு வேண்டுகோள்

இந்தக் கரோனா காலத்தில் பல பேரை நாம் இழந்திருக்கிறோம்.ஒரு மருத்துவமனையின் கண்காணிப்பாளராக, மருத்துவமனைக்குள் உட்கார்ந்திருக்கும் நான் தினந்தோறும் பல நோயாளிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.மாஸ்க் போன்றவை போடத் தவிர்க்கின்றோம்.அதனையும் மீறி கரோனா வந்துவிட்டால் பயப்படவேண்டியதில்லை. கரோனா பாஸிட்டிவ் என்று வந்தபின்பு, 4 நாள் மருத்துவமனையில் இருந்தால், மீண்டும் டெஸ்ட் எடுத்தால் கரோனா நெகட்டிவ் என்று வருகிறது.அத்துடன் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். சரியாகி விட்ட்து என்று கவனம் இல்லாமல் இருக்கிறார்கள்.வீட்டிற்கு வந்தாலும் பாஸிட்டிவ் என்று வந்த்திலிருந்து,7ஆவது நாள் நுரையீரல் சி.டி. ஸ்கேன் எடுக்கவேண்டும். அதில் பாதிப்பு இல்லை என்றால் ஒன்றும் இல்லை. பாதிப்பு இருந்தால் மருத்துவம் எடுக்கவேண்டும். அப்படி எடுத்துவிட்டால் பிரச்சினை இல்லை. அதனைக் கவனிக்காமல் விட்டு விட்டால், நிமோனியா பாதிப்பு ஏற்படுகிறது .அந்த நிலையில்  மருத்துவமனைக்குச்சென்றால்,எவ்வளவு பணம் செலவழித்தாலும் காப்பாற்ற இயலாது.எனவே முறைப்படி மருத்துவம் எடுத்துக்கொண்டால் பயப்படவேண்டியதில்லை.சமூக வலைத்தளங்களில் திராவிடம் வேறு,தமிழ் தேசியம் வேறு என்று குழப்புகிறவர்களுக்குப் பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வா.நேரு

தொடர்ந்து பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்தலைவர் வா,நேரு தொடக்கவுரையாற்றினார். “ வெகு நாட்களுக்குப் பின் தென்மாவட்ட பொறுப்பாளர்களை நேரில் சந்திப்பது போல காணொலி வழியாகக் காண்பதில்,உரையாற்றுவதில் மகிழ்ச்சி ..ஏற்பாட்டளர்களுக்கு நன்றி ,அய்யா ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலில் தொடர்ந்து நடைபோடுவோம்,அனைத்து வகையிலும் அவரது கட்டளைகளை நிறைவேற்றுவோம்என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.

இரா.ஜெயக்குமார்

தொடர்ந்து திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார்தலைமைச்செயற்குழு தீர்மானங்கள்என்னும் தலைப்பில் உரையாற்றினார். அவர் தனது உரையில் பொதுக்குழு போல தலைமைச்செயற்குழு நடைபெற்றதையும்,169 பேர் கலந்துகொண்டதையும் குறிப்பிட்டு,அதில் நிறைவேற்றப்பட்ட 11 தீர்மான்ங்களையும் ஒவ்வொன்றாக குறிப்பிட்டு,அதன் சிறப்புகளை விவரித்தார்.கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்,தலைமைச்செயற்குழுவில் ,பெரியார் உலகம் பற்றிக்குறிப்பிட்டதைக் குறிப்பிட்டு,புதிய அரசில் அதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்பதனைக் குறிப்பிட்டார். 11 தீர்மானங்களில் 7ஆவது தீர்மானம் நமது செயல்பாட்டுக்கான தீர்மானம் என்பதைக் குறிப்பிட்டு,அதனை எப்படியெல்லாம் செயல்படுத்தலாம் என்பதனை தனது அனுபவத்தின் மூலமாக விவரித்தார்.

விடுதலையை பி.டி.எப் மூலம் அனுப்புவது, காணொலிக் கூட்டங்களை நடத்துவது, மதுரையில் சிறப்பாக செல்வம், நேரு, சுப.முருகானந்தம், சுரேஷ் போன்றவர்கள் இணைந்து நடத்துவதுபோல தென்மாவட்டங்களில் மற்றவர்களும் நடத்தவேண்டும். ஆசிரியர் பேசும் காணொலிக் கூட்டங்களில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும். ஆசிரியர் கூட்டங்களில் காணொலி வழியாக 500 பேர் வரை கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது. அய்யா ஆசிரியர் அவர்களை நாம் காணொலி வழியாகப் பார்க்கலாம். நம்மை அவர் பார்க்க முடியும். எனவே, காணொலிக் கூட்டங்களில் கலந்து கொள்ளவேண்டும்.

சுவரெழுத்துப்பிரச்சாரங்களை மிகப்பெரிய அளவில் செய்ய வேண்டும். கரோனாவில் பாதிக்கப்பட்ட தோழர்களை ஆசிரியர் அவர்கள் போனில் அழைத்துப் பேசுகிறார்கள். மாவட்டத் தலைவர்கள், மாவட்டத் தோழர்களிடம் பேசவேண்டும்.தொடர்ச்சியான தொடர்பு வைத்துக்கொள்வதோடு, இந்தக் கரோனா காலத்தில் நம்மால் ஆன உதவிகளைத் தோழர்களுக்குச் செய்ய வேண்டும்.

அய்யா ஆசிரியர் அவர்கள் 18  நாள் தமிழ்நாடு முழுக்கச்சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். தேர்தல் பிரச்சாரத்தில் மட்டுமல்ல, தி.மு..கூட்டணி வலுவாக அமைவதற்கு கூட்டணியில் உள்ள அத்தனை தலைவர் களிடமும் ஆசிரியர் ஆசிரியர் அவர்கள் பேசினார்கள்.மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது. நல்ல முறையில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தோழர்கள் நல்ல உடல் நலத்தோடும்,பாதுகாப்போடும் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு உரையாற்றினார்.

தொடர்ந்து நெல்லை மணடலத் திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் சு.காசி, திண்டுக்கல் மண்டலத்தலைவர் கருப்புச்சட்டை நடராசன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டி, மாவட்டச்செயலாளர் பெ.கிருட்டிணமூர்த்தி, நெல்லை மாவட்டச்செயலாளர் .இராசேந்திரன், தேனி மாவட்டத் தலைவர் ரெகு.நாகநாதன், மாவட்டச்செயலாளர் பூ.மணிகண்டன், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பால்.ராசேந்திரம், மாவட்டச்செயலாளர் முனியசாமி, தென்காசி மாவட்டத்தலைவர் .வீரன், பழனி மாவட்டத் தலைவர் இரணியன், குமரி மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன், பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் துணைத்தலைவர் கே.டி.சி.குருசாமி ஆகியோர் தங்கள் கருத்துகளை எடுத்துவைத்தனர்.

கழகத் துணைத்தலைவர்

கவிஞர் கலி.பூங்குன்றன்

நிறைவாக திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்,’இது என்றும் பெரியார் மண்என்னும் தலைப்பில் உரையாற்றினார்.அவர் தனது உரையில்கலந்துரையாடல் கூட்டத்தில் நிறையப் பேசுகிறோம்.என்ன செய்தோம்? என்ன நிறைவேற்றியிருக்கிறோம் என்பதுதான் முக்கியம். இந்தக் கலந்துரையாடல் கூட்டம் முடிந்து, அடுத்த கலந்துரையாடல் நடக்கும்போது, இந்த இடைப்பட்ட காலத்தில் என்னென்ன நிறைவேற்றியிருக்கிறோம் என்னும் பட்டியலைப் பொறுப்பாளர்கள் தரவேண்டும். முழுமையாக நிறைவேற்றவில்லை என்றாலும், என்ன செய்தோம் என்பதைத் தரவேண்டும்.அது மிக முக்கியம்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்த அளவில் இரண்டு அணுகுமுறைகள்தான். ஒன்று பிரச்சாரம்.அடுத்தது போராட்டம். கரோனாவால் நேரிடையான பிரச்சாரத்திற்குத் தடை இருக்கிறது. பகுத்தறிவுத் தகவல் பலகையை நிறுவி அதில் தினமும் எழுதிப்போடுங்கள். அறிவியல் செய்திகள், தந்தை பெரியாரின் பொன்மொழிகள் என்று கருத்துப்பிரச்சாரம் நடக்கவேண்டும்.

நமது இயக்கம் ஒரு சித்தாந்தத்தின் அடிப்படையில் இயங்கும் இயக்கம்.நமது சித்தாந்தம் தமிழ்நாட்டோடு நின்று விடக்கூடியதல்ல. உலகம் முழுவதற்கும் தேவையானது. நடந்து முடிந்த 2021 தேர்தல் வெறும் தேர்தல் அல்ல. அரசியல் போராட்டம் அல்ல. ஆரிய திராவிடப்போராட்டம்.பார்ப்பனர்கள் ராமராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்று சொன்னார்கள். ராமராஜ்யம் என்றால் பார்ப்பன ராஜ்யம்.ஆனால் பார்ப்பனிய சித்தாந்தத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அகற்றும் தத்துவம் தந்தை பெரியாரின் தத்துவம்.அது வெற்றி பெற்றிருக்கிறது.

தமிழ் நாட்டில் பாரதிய ஜனதா கட்சி என்றால் பார்ப்பனிய ஜனதா கட்சி என்று மக்கள் மனதில் பதிந்திருக்கிறது. நினைத்துப்பாருங்கள். 234 சட்டமன்றத்தொகுதிகளில், ஒரு தொகுதியில் கூட ஒரு பார்ப்பனர் கூட  வெற்றி பெறமுடியவில்லை.எந்த ஒரு அரசியல் கட்சியும் பார்ப்பனரை வேட்பாளராக நிறுத்துவதற்குத் தயாராக இல்லை. அப்படி ஒரு அடித்தளத்தை தந்தை பெரியார் உருவாக்கி வைத்திருக்கிறார். பின் இது தந்தை பெரியார் மண் இல்லாமல் வேறு என்ன?

குருமூர்த்தி துக்ளக்கில் எழுதினார். தமிழ் நாட்டு மக்கள் பக்தியாக இருக்கிறார்கள். சாமியெல்லாம் கும்பிடுகிறார்கள். ஆனால் தேர்தல் என்று வந்தால் திராவிடர் கழகத்திற்குத்தான் ஓட்டுப்போடுகிறார்கள் என்று எழுதினாரேஅவருக்கு திராவிடர் கழகம் தேர்தலில் போட்டி போடாத இயக்கம் என்றெல்லாம்  தெரியும். இருந்தாலும் திராவிடர் கழகம் என்று குறிப்பிடுவது திராவிட முன்னேற்றக் கழகத்தை. அதனால்தான் இது பெரியார் மண். பெரிய ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை. ஒரு இடத்தில் பெரியார் சிலை உடைக்கப்படுகிறது. அதனை எதிர்த்து மறியல். நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். மறியல் செய்தவர்களில் பெரும்பாலோர் பட்டை அடித்தவர்கள், உத்திராட்சக்கொட்டை போட்டிருப்போர், நாமம் போட்டிருப்பவர் எல்லாம் மறியல் செய்கிறார்கள். அப்போது ஒரு தொலைக்காட்சி நிருபர், மறியல் செய்பவரிடம் கேட்கிறார். நீங்கள் விபூதி பூசியிருக்கிறீர்கள். கடவுள் நம்பிக்கையாளர். பெரியாரோ கடவுள் இல்லை என்பவர். நீங்கள் எதற்காக மறியல் செய்கிறீர்கள் என்று கேட்டபோது, ‘பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னவர்தான். அவர் இல்லாவிட்டால்,எனது மகன் படித்து அமெரிக்காவில் இன்று வேலை பார்ப்பது எப்படி சாத்தியம்?” என்று பதில் கேள்வி  கேட்கிறார். இது பெரியார் மண் இல்லாமல் வேறு என்ன?.

நமது தெருவில், நமது ஊரில் நாம் பார்க்கின்றோம்.கல்வி கிடைத்ததால் எவ்வளவு பெரிய வளர்ச்சி. நம் கண் முன்னால் அவர்களின் வாழ்க்கை எவ்வளவு உயர்ந்திருக்கிறது.இதற்குக் காரணம் தந்தை பெரியார்.தோழர் நல்லகண்ணு ஒரு முறை சொன்னார், நாங்கள் கம்யூனிஸ்டுகள், யாரையும் தந்தை என்று அழைப்பதில்லை, தந்தை பெரியாரைத் தவிர என்று குறிப்பிட்டார். சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதி நாக பூசணம் அவர்கள், இந்தியாவிற்கு மகாத்மா காந்தி என்றால் தென்னாட்டின் மகாத்மா பெரியார் என்று குறிப்பிட்டார். இந்த மண்ணில் பல உரிமைகள் தந்தை பெரியாரால்தானே  நமக்குக் கிடைத்தது.

திராவிடன் என்று சொல்லாதே, தமிழன் என்று சொல்லவேண்டும் என்று சிலர் சொல்கின்றார்கள் என்பதைச் சொன்னார்கள். உன்னைப் பற்றி நான் தெரிந்துகொள்ளவேண்டுமென்றால், உன் நண்பனைச் சொல் என்பதாகச் சொல்வார்கள். ஆனால், தந்தை பெரியார், ஒருவரைத் தெரிந்துகொள்ளவேண்டுமென்றால்  அவனது எதிரியைப் பார்க்கவேண்டும் என்று சொன்னார். திராவிடன் என்று சொல்லாதே, தமிழன் என்று சொல்பவர்களின் எதிரி யார்? பார்ப்பனர்கள் இல்லை. தந்தை பெரியாரின் தத்துவத்தின் ஏபிசிடியே பார்ப்பன எதிர்ப்புதான். அதுதான் பின்னர் சமூக நீதியைக்  கேட்கத் தூண்டியது. கல்வி கற்று மேலே வந்திருக்கிறார்கள், ஆனால் பார்ப்பன எதிர்ப்பு இல்லை, திராவிடத்தை எதிர்க்கிறார்கள் என்றால் அவர்கள் யாரின் ஏவுகணைகள் என்பதற்கு பெரிய விளக்கமெல்லாம் வேண்டியதில்லை. அவர் ஏன் திருவொற்றியூரில் நிற்கவேண்டும்?.ஒரு குறிப்பிட்ட சாதியினர் அதிகமாக இருக்கிறார்கள் என்பதால்தானே அங்கு நின்றிருக்கிறார்? இதெல்லாம் சீக்கிரம் சாயம் வெளுத்துப்போகும். அணுகுண்டு அய்யாவு, விபூதி வீரமுத்து என்று வேகமாகப் பேசிய பல எதிர்ப்பாளர்களை நாம் பார்த்திருக்கிறோம். அந்தப் பட்டியலில் இப்போது வேகமாகப் பேசுகிறவர்களும் சேர்வார்கள்.நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை.

தமிழன் ஓரினமாகச்சேர்வதற்கு எது தடையாக இருக்கிறது-ஜாதிதானே? பிறவி அடிப்படையிலான ஜாதி இழிவு ஒழிந்தால்தானே தமிழன் ஒன்றாக இணைவான். வேற்றுமை ஒழிய வழி என்ன? ஜாதி ஒழிப்பு என்பது அடிப்படை.கொசுத் தொந்தரவினை ஒழிக்க, கொசு உற்பத்தியாகின்ற இடத்தை அழிக்கவேண்டும். ஜாதி ஒழிய வேண்டும் என்பதற்காக இந்திய அரசியல் சட்ட்த்தினை எரித்தவர்தானே தந்தை பெரியார். சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? என்று கேட்டார்.அரசியல் சட்டத்தை எரித்து 10000 தோழர்கள் சிறைக்குப்போனார்கள்.தனித்தனியாக ஜாதியாகப் பிரிந்துகிடக்கும் தமிழர்களை ஜாதியை ஒழிக்காமல் எப்படி ஒன்றிணைப்பது?சொல்வார்களா?

திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்திராவிடம் வெல்லும்என்று பிரச்சாரம் செய்தார். வெற்றி பெற்றோம். இத்தோடு இது முடிவதில்லை.இந்தியா முழுவதும் இந்தத் தத்துவம் செல்லவேண்டிய அவசியம் இருக்கிறது..பி.யில்,பீகாரில் தந்தை பெரியாரின் திராவிடச்சித்தாந்தம் தேவைப்படுகிறது.கேடிகே தங்கமணி ஒரு தகவல் சொன்னார்.கிரண் முகர்ஜி என்னும் மேற்கு வங்காளத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்,கேடிகே தங்கமணியிடம் ஒரு கேள்வி கேட்கிறார்.இன்னும் 500 ஆண்டுகளுக்குப் பின்னும் நினைவு கூறப்படும் இந்தியத்தலைவர்கள் யார் எனக்கேட்கிறார். கேடிகே தங்கமணி அவர்கள் பல தலைவர்களைச்சொல்கிறார். முடிவாக கிரேன் முகர்ஜியே, அந்தத் தலைவர்கள் பெரியாரும், சிங்காரவேலரும் என்று குறிப்பிடுகின்றார்.

நார்வேயைச் சார்ந்த ஒருவர், தமிழ் நாட்டைச்சார்ந்த ஒருவரைச்சந்தித்தபோது, யூ ஆர் கம்மிங் ப்ரம் பெரியார் லேண்ட் என்று கேட்கிறார். பெரியார் பன்னாட்டு மய்யம், ஜெர்மனியில் நடந்த மாநாட்டில்,உலகில் மதத்திற்காக நிறைய இரத்தம் சிந்திவிட்டோம். மதமற்ற உலகம் அமைவதற்கான தத்துவம் தந்தை பெரியாரின் தத்துவம் என்று சொன்னார்கள். புரட்சிக்கவிஞர்மண்டைச்சுரப்பை உலகு தொழும்என்றார். அது உண்மையாக இன்று நடந்துகொண்டிருக்கிறது.

பல மாநிலங்களில் இருந்து வந்த மருத்துவர்கள் கலந்துகொண்ட ஒரு மாநாடு. அதில் ஒரு அமைப்பாளர்.தமிழ்நாட்டில் இருந்து போன ஒரு மருத்துவரிடம், நான் கடந்த 25 ஆண்டுகளாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எல்லா மாநிலத்தில் இருந்து வரும் டாக்டர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் ஜாதிப்பட்டம் போட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் இருந்து வரும் டாக்டர்கள் பெயருக்குப் பின்னால் ஜாதிப்பட்டம் இல்லையே? எப்படி? என்று கேட்கிறார். அத்ற்குப் பதில்தந்தை பெரியார்Õ.

1929-ல் ஜாதிப்பட்டத்தை துறப்பதை தீர்மானமாக நிறைவேற்றி, அதனை செயல்படுத்திய இயக்கம் திராவிட இயக்கம். தலைவர் தந்தை பெரியார். இந்த  மண் பெரியார் மண் இல்லாமல் வேறு என்ன?

இராவணலீலா

அன்னை மணியம்மையார், சென்னை பெரியார் திடலில் நடத்திய  இராவண லீலா எவ்வளவு பெரிய உணர்ச்சிமயமான நிகழ்வு. அறிஞர் அண்ணா அவர்களும், கலைஞர் அவர்களும் ஒரு திரைப்படம் பார்க்கப்போகிறார்கள். திரைப்படத்திற்கு முன்னால் நியூஸ் போடுகிறார்கள். அதில் இராம லீலா நிகழ்வைக் காட்டுகிறார்கள். பிரதமர் நேரு போன்றவர்கள் உட்கார்ந்திருக்க, இராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் போன்றவர்களின்  உருவத்தை எரிக்கின்றார்கள். கலைஞர் அண்ணாவிடம் கேட்கிறார்அண்ணா, இதனைப் போல நாம் இராவண லீலா கொண்டாடி இராமன்  படத்தை எரித்தால் என்ன?” என்று கேட்கிறார். அண்ணா திராவிட நாட்டில் கலைஞர் கேட்டதைப் பதிவு செய்திருக்கிறார். அதனை எடுத்து விடுதலையில் இராவண லீலா நடத்துவதற்கான பிரச்சாரம் நடக்கும்போது நாம் வெளியிட்டோம்.

கலைஞருக்கு மத்திய அரசு பயங்கர நெருக்கடி கொடுக்கிறது. நாம் இந்தப் பக்கம் இராவண லீலா நடத்துவோம் என்று எழுதிப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறோம். அன்னை மணியம்மையார் தலைமையில் இராமரை எரித்தோம்.வழக்கு பதிவு செய்து,கீழ்க்கோர்ட்டில் 6 மாதம் சிறைத்தண்டனை கொடுக்கப்பட்ட்து.மேல் கோர்ட்டில் மனுச்செய்தோம்.மேல் கோர்ட்டு நீதிபதி சோமசுந்தரம். நல்ல பட்டை அடித்துத்தான் உட்கார்ந்திருந்தார்.அவரிடம் வழக்கு. நாங்கள் எல்லாம் கீழ்க்கோர்ட்டில் 6 மாதம் தண்டனை கொடுத்தார்.இவர் 6 வருடம் அம்மாவிற்கு கொடுக்கப்போகிறார் என்று நினைத்துக்கொண்டிருந்தோம். மதுரை வழக்குரைஞர் மகேந்திரன் மூலமாக ஒரு வழக்குரைஞர்தான் நமக்காக வாதாடினார். கடைசியில் தீர்ப்பு, Ôதந்தை பெரியார் 50, 60 ஆண்டுகாலமாக கடவுள் எதிர்ப்பு பிரச்சாரம் செய்துவருகின்றார். சட்டப்படி பிரச்சாரம் செய்ய உரிமையுண்டு என்று சொல்லி, கீழ்க்கோர்ட் தீர்ப்பினை ரத்து செய்கிறேன் என்று தீர்ப்பளித்து, அன்னை மணியம்மையார் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார். இது பெரியார் மண் இல்லாமல் வேறு என்ன?

1971-தேர்தல். இராமனைச் செருப்பால் அடித்து விட்டார்கள் என்று பிரச்சாரம் செய்தார்கள். இராமனே தேர்தலில் நிற்பதுபோல ஒரு பிரமையை பத்திரிக்கையின் மூலமாக உருவாக்கினார்கள். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியிடம் இதனைப் பற்றிக் கேள்வி கேட்டபோதுபெரியார் இப்போதுதானா அடிக்கின்றார், கடந்த 50 வருடமாக அடித்துக்கொண்டுதானே உள்ளார்Ó என்று பதில் சொன்னார்.

தி.மு.. மிகப்பெரிய வெற்றியை 1971-ல் பெற்றது  அனைவரும் 'உளமாற 'என்று சொல்லி பதவி ஏற்றார்கள். தந்தை பெரியார் அமர்ந்திருக்கிறார். பதவி ஏற்றபின்பு, அய்யாவிடம் வந்து வணங்கி விட்டுச்சென்றார்கள், இராஜாஜிகடவுள் இல்லை என்று சொல்பவரின் திருமுன் பதவி ஏற்றுக்கொண்டார்கள்என்று அறிக்கை விட்டாரே. தமிழ்நாடு ஆத்திகர்கள் வாழத் தகுதி இல்லாத இடமாகி விட்டதே என்று அறிக்கை கொடுத்தாரே- இது பெரியார் மண்ணா, இல்லையா?.

அறிஞர் அண்ணா ஆட்சியே தந்தை பெரியாருக்கு காணிக்கை என்றார். 2019 தேர்தலில் ஆசிரியர் அவர்கள் கிருஷ்ணனைப் பற்றிப் பேசிவிட்டார் என்று பிரச்சினை எழுப்பினார்கள்தி.மு.. கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றது. நாடாளுளுமன்றத்தில்தந்தை பெரியார் வாழ்கÕ என்று முழக்கம் கேட்டது. இது பெரியார் மண்ணா இல்லையா? இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் இந்தி இல்லை. புதிய கல்விக்கொள்கையை எதிர்க்கின்றோம். ஏன்? இது பெரியார் மண். Ôதி திராவிடியன் மாடல்Õ என்று ஒரு ஆங்கிலப் புத்தகம் வந்திருக்கிறது. நிறைய புள்ளிவிவரங்களோடு வந்திருக்கிறது. முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நாடாளுமன்றத்திலேயே பெரியார் கனவு நனவாகிவிட்டது என்றார்.

இன்றைய முதல்வர் மு..ஸ்டாலின் அவர்கள், எங்களுடைய பயணத்தை முடிவு செய்வது பெரியார் திடல் என்றார். முதல்வராக வந்தவுடன் அவர் பதிவிட்டது Ôதிராவிடன் ஸ்டாக்’. தந்தை பெரியாருக்குப் பின் அன்னை மணியம்மையார், அதற்குப்பின் இன்றைய தலைவர் ஆசிரியர் என்று தொடர்ச்சியாக பெரியார் மண்ணாகத்தான் இந்த மண் இருக்கிறது. பி.ஜே.பி.யில் தமிழ் நாட்டில் பார்ப்பனர் தலைவராக வரமுடியவில்லை, தமிழிசை, முருகன் என்று வருகின்றார்கள் என்று சொன்னால் அதற்கான காரணம், இது பெரியார் மண் என்பதுதான்.

தமிழ்நாட்டின் காங்கிரசு தலைவராக வெங்கட்ராமனை கொண்டு வரவேண்டும் என்று சொன்னபோது, இந்திராகாந்தி அதனை மறுத்து, Ôதமிழ் நாட்டுக்கு காங்கிரசு தலைவராக ஒரு பிராமினைப் போட்டால், காங்கிரசு வளருமாஎன்று கேட்டது வரலாறு". இதனை எங்களிடத்தில் சொன்னவர் மறைந்த காங்கிரசு தலைவர் மூப்பனார் அவர்கள். இந்திராகாந்திக்கே தெரிந்திருக்கிறது இது பெரியார் மண் என்று. இப்படி நிறைய செய்திகளைச்சொல்லிக் கொண்டே போகலாம்Ó என்று குறிப்பிட்டு, பல்வேறு நிகழ்வுகளையும், வரலாறுகளையும் குறிப்பிட்டு, பாடமாக கேட்பவர் மனதில் பதியும் வண்ணம் ஒரு மணி நேரம் கழகத்துணைத் தலைவர்  உரையாற்றினார்

No comments:

Post a Comment