குருமூர்த்திகளுக்கு என்ன அக்கறை? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 27, 2021

குருமூர்த்திகளுக்கு என்ன அக்கறை?

 மின்சாரம்


- ‘துக்ளக்', 2.6.2021

திராவிடர் கழகத் தலைவரை சீண்டாவிட்டால் பார்ப்பனர்களுக்கு அதுவும்துக்ளக்குக்கு - அதிலும் குறிப்பாக திருவாளர் குருமூர்த்தி அய்யருக்குக் கண்டிப்பாகத் தூக்கம் வராது - வரவே வராது.

சதா அவாளின் எண்ணமெல்லாம்பிராமணாள்', சங்கர மடம் பெரியவாள், பா..., ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார், Etc., Etc.,

இதே நினைப்பு தான் அந்த ஆத்திரத்தில் தான் - இதற்கெல்லாம் யார் எதிரி - எந்த அமைப்பு எதிரியானது - என்று எண்ணும்போது வீரமணியும், திராவிடர் கழகமும் தான் அவர்களின் கண்முன் வந்து நிற்கிறார்கள்.

அரசியலிலோ திமுகதான் அவர்களை உறுத்து வது - திமுக என்றால் தி.. ஞாபகத்துக்கு வருகிறது - பெரியார் ஞாபகத்துக்கு வருகிறார் - ஆரிய மாயை எழுதிய அண்ணா, கலைஞர் ஞாபகத்துக்கு வரு கிறார்கள் - இப்பொழுதெல்லாம் வீரமணி ஞாபகத் துக்கு வருகிறார். ஆம் வீரமணி ஃபோபியாதான்.

அந்த நமைச்சலைப் போக்கிக் கொள்ள ரத்தம் வரும் வரை சொரிந்து தீர்த்துக் கொள்கிறார்கள்.

எழுவர் விடுதலையில் இவர்களுக்கு என்ன வந்தது? ராஜீவ் காந்தி மீது அவ்வளவு ப்ரீத்தியா?

ராஜீவ் காந்தி குடும்பத்தாரே இறங்கி வந்த பிறகு - சதா ராஜீவையும், சோனியாவையும், ராகுலையும் கரித்துக் கொட்டும் கூட்டத்திற்கு என்ன அப்படி அளவு கடந்த அக்கறை - அதீத ஆர்வம்?

தமிழ் உணர்வு, தமிழர் உணர்வு, விடுதலைப் புலி.... இப்படி இப்படி இப்படியாக சொல்லிக் கொண்டே போய் எங்கேயோ முட்டிக் கொள் கிறார்கள்.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி. தாமஸ் அவர்களே அந்த விசாரணையில் தவறு நடந்தது என்பதை ஒப்புக் கொள்கிறார். புலன் விசாரணை அதிகாரி தியாகராஜன் ரகோத்தமன் போன்றோரும் வாக்குமூலத்தை தவறாகப் பதிவு செய்துவிட்டோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பிறகு - காந்தியாரை கொன்ற கோட்சே கட்சிக்குஜே" போடுவோர்களுக்கு என்ன அப்படி யொரு அதீதம்!

தண்டனை உண்டா?

காந்தியின் 71ஆவது நினைவுநாள் அன்று  அலிகர் நகரில் இந்து மகாசபா அமைப்பைச் சேர்ந்த பூஜா சகுண் பாண்டே என்ற பெண் தலைவர் தலைமையில் சிலர் மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை வைத்து அதை துப்பாக்கியால் (ஏர்கன்) சுட்டனர்.

அந்த உருவ பொம்மையில் வைக்கப்பட்டிருந்த சிவப்பான திரவம் ரத்தம் போல் வழிந்து ஓடியவுடன், அந்த உருவ பொம்மை மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினார்கள். இதை வீடியோவாக எடுத்து வெளியிட்டனர். சுடும்போது நாதுராம் கோட்சே வாழ்க என்று இந்தியில் முழக்கமிட்டனர்.

காந்தி கொலைக்கு மூளையாக இருந்த வி.டி. சாவர்க்கர் படத்தையும், கொலை செய்யப்பட்ட காந்தியாரையும் நாடாளுமன்ற மண்டபத்தில் ஒரு சேர வைத்து அழகு பார்க்கும் கும்பலுக்கு அப்படி என்ன அசாத்தியம்?

காந்தி கொலைக்கு மூல கர்த்தாவாக இருந்த சாவர்க்கருக்குப்பாரத ரத்னா' பட்டம் கொடுக்க வேண்டும் என்று பாயசம் குடித்து எழுதுகிற கூட்டம் இதில் எதற்கு மூக்கை நுழைக்க வேண்டும்?

ஒடிசாவில் குஷ்டரோகிகளுக்குக் குடும்பத்தோடு தொண்டு ஊழியம் செய்து வந்த பாதிரியார் குடும் பத்தை தூங்கும்போது - ஜீப்பில் வைத்து துடிக்க துடிக்க எரித்த பஜ்ரங்தள் தலைவனுக்குயதாஸ்துபாடியவர்கள் யார்?

பஜ்ரங்தள்காரர்கள் நல்லவர்கள் - அவர்கள் இந்தக் காரியத்தில் ஈடுபடமாட்டார்கள் என்று, தான் வகிக்கும் உள்துறை அமைச்சர் என்ற பொறுப்பை யும், தகுதியையும் தூக்கி எறிந்து வக்காலத்துப் போட்டுப் பேசிய பெருமான் தானே எல்.கே. அத்வானி!

ஒடிசா பாதிரியார் படுகொலை செய்யப்பட்ட போது - அந்த பஜ்ரங்தள் அமைப்பின் மாநிலத் தலைவராக இருந்த பிரதாப் சந்திர சாரங்கி தானே இப்பொழுது - பா... ஆட்சியில் மத்திய அமைச்சர்.

அந்தப் படுகொலையில் ஆயுள் தண்டனை பெற்ற தாராசிங் ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் இருந்தது எத்தனை நாள்?

சிறையில் இருந்த காலத்திலும் எத்தகைய ராஜ உபசரணை!

மாலேகான் குண்டு வெடிப்புக் குற்றவாளி சிறையில் இருந்து பிணையில் வந்து எம்.பி.யானது எப்படி?

நீதிபதிகளைத் தரக்குறைவாக (அரசியல்வாதிகள் காலில் விழுந்தவர்கள் என்று சொன்னபிறகும்கூட) பார்ப்பான் ஒருவரால்தான் பேச முடியும். அப்படிப் பேசினாலும் பார்ப்பானாக இருந்தால் மயிலிறகால் வருடும் தண்டனை(?) கிடைக்கும் அப்படித்தானே!

கடைசியாக ஒன்றுதுக்ளக்' கார்ட்டூனில் ஒரு ஆலோசனை கூறியிருக்கிறார். அதற்காகக் கொஞ் சம்நன்றி'கூட சொல்லலாம் என்றே தோன்றுகிறது.

No comments:

Post a Comment