ஈரோடு கலாவதி மறைவு கழகத் தலைவர் தொலைபேசிமூலம் ஆறுதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 27, 2021

ஈரோடு கலாவதி மறைவு கழகத் தலைவர் தொலைபேசிமூலம் ஆறுதல்

திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தே.காமராஜ் அன்னையா ரும், ஈரோடு மாவட்ட திராவிடர் கழக மகளிர் பாசறை செயலாளர் கா. ஜீவரத்தினம் மாமியாரு மாகிய தே.கலாவதி (வயது 58) அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (26.5.2021) ஈரோடு அரசு மருத்துவ மனையில் இயற்கை எய்தினார் என் பதை அறிந்து வருந்துகிறோம்.

பெருந்தொற்று மற்றும் முழு ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பு கருதி கட்டாயம் யாரும் நேரில் வர வேண்டாமென தே.காமராஜ் மற்றும் குடும்பத்தினர் வேண்டு கோள் விடுத்த நிலையில், கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்  தே.காமராஜ் மற்றும் அவரது குடும்பத்தி னரிடம் அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.

மேலும், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் அழகர்சாமி, மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு .சண்முகம், மாவட்ட தலைவர் கு.சிற்றரசு, மாவட்ட செயலாளர் மா.மணிமாறன்,  பேராசிரியர் முனைவர் .காளிமுத்து, மாவட்ட கழக அமைப்பாளர் சிவகிரி.கு.சண்முகம், மண்டல இளைஞரணி செயலாளர் சா.ஜெபராஜ் செல்லத்துரை பொதுக் குழு உறுப்பினர் செ.பிரகாசன், விஜயமங்கல கழகத் தோழர்கள் மோகன், சசி, அன்பு ஆகியோர் அலைபேசி வாயிலாக அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதல் கூறினார்கள்.

கடந்த வாரம் தான் மறைவுற்ற அம்மையார் அவர்களின் வாழ்விணையர் திரு..தேவராஜ் மறைவுற்றார் என்பதறிந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உள்பட கழக மாநில, மண்டல, மாவட்ட, கழகப் பொறுப்பாளர்கள், நேரிலும் அலைபேசி வாயிலாகவும் ஆறுதல் கூறிய நிலையில், இன்று அம்மையார் அவர்களின் மறைவு தோழர்கள் மத்தியில் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தி உள்ளது.

மறைவுற்ற அம்மையார் அவர்களுக்கு தே.காமராஜ் என்ற மகனும், தே.வடிவுக்கரசி மற்றும் தே.மகேஷ்வரி என்ற இரு மகள்களும், மூன்று பேரக் குழந்தைகளும் உள்ளனர். 

ஈரோடு மண்டல திராவிடர் கழக மாணவர் கழக செயலாளர் பெ.மதிவாணன், பெரியார் வாசகர் வட்ட தலைவர் பி.என்.எம்.பெரியசாமி, மற்றும் மாலதி பெரியசாமி ஆகியோர் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்.  தொடர்புக்கு: தே.காமராஜ் 9367766323.

No comments:

Post a Comment