கல்விக் காவலர் துளசி அய்யா மறைவு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 19, 2021

கல்விக் காவலர் துளசி அய்யா மறைவு கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை

பூண்டி புஷ்பம் கல்லூரி தாளாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கல்விக்காவலர் திரு துளசி அய்யா வாண்டையார் அவர்கள் (வயது93) வயது மூப்பின் காரணமாக  17.05.2021 அன்று அதிகாலை சென்னை சாலிகிராமம் இல்லத்தில் மறைவுற்றார். சென்னையிலிருந்து தஞ்சை மாவட்டம் பூண்டிக்கு உடல் கொண்டு வரப்பட்டு அவர்களது இல்லத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

மாலை 4 .30 மணியளவில் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல், மன்னார்குடி மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் தங்க.வீரமணி, மாவட்ட மாணவர் கழக தலைவர் இரா.கபிலன் ஆகியோர் பூண்டியில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மாலை வைத்து திராவிடர் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தினார்கள். செய்தி அறிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மறைந்த துளசி அய்யா அவர்களின் மகன் து.கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்கள். விடுதலையில் இரங்கல் அறிக்கையும் வெளியிட்டார்கள். தமிழர்தலைவரின் இரங்கல் அறிக்கை அனை வருக்கும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment