கரிசல் குயிலுக்கு கருஞ்சட்டைகளின் வீரவணக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 19, 2021

கரிசல் குயிலுக்கு கருஞ்சட்டைகளின் வீரவணக்கம்!

முதுபெரும் எழுத்தாளரும், கரிசல் குயில் என அனைவராலும் போற்றப்பட்டவருமான எழுத்தாளர் கி.ராஜநாராயணன் (99)  அவர்கள் முதுமை காரணமாக மறைவுற்றார். அன்னாரின் இறுதி நிகழ்வு  கோவில்பட்டி அருகிலுள்ள இடைச்சேவல் கிராமத்தில் இன்று நடைபெறும் நிலையில், கழகத் தலைவர் தமிழர் தலைவர் அறிவுரைப்படி தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் தமிழரசிதுணைவர் வசந்தகுமார், டாக்டர் சுதாகர், நர்சிங் காலேஜ் பிரின்சிபல் ராஜரத்தினம், புவனேஸ்வரி, கோகுல் மற்றும் கழகத் தோழர்கள் மாலை வைத்து மரியாதை செய்தனர்.

ஆசிரியர் அய்யா அவர்கள் அனுப்பிய இரங்கல் செய்தியை கி.ராஜநாராயணன் அவர்களின் மகன் திவாகரன் அவர்களிடம்  கொடுத்தும், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் வழங்கியும், கழகத் தலைவரின் சார்பாகவும், கழகத்தின் சார்பாகவும் வீரவணக்கத்தை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொண்டனர்.

No comments:

Post a Comment