செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 6, 2021

செய்தியும், சிந்தனையும்....!

உண்மையான செக்யூலரிசம்

கேள்வி: மதவாதம் என்றால் என்ன? விளக்குங்கள்.

பதில்: நமது அரசியல் அகராதியில் அர்த்தம் கூறுகிறேன்: ஹிந்து மதம் சம்பந்தப்பட்ட எல்லாமே மதவாதம். மற்ற மதங்கள் சம்பந்தப்பட்ட எல்லாமே மதம் கலக்காத செக்யூலரிசம்.

- ‘துக்ளக்', 12.5.2021)

>>           ஹிந்து மதத்திலே பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிராமணன். அவன் துவிஜாதி - இரு பிறப்பாளன் - பூணூல் போடுவது அதைக் காட்டுவதுதான்.

பூணூல் போடாதவன் சூத்திரன். அவன் விபசாரி மகன் உள்பட ஏழுவகைப் படுவான். (மனுதர்மம் அத்தியாயம் 8; 415 ஆவது சுலோகம்).

இது என்னவாதம் குருமூர்த்தி அய்யரே?

சொந்த மதக்காரனையே இழிவுபடுத்தும் ஒரு மதத்தைத் தோலுரித்துத் தொங்கப் போடுவதுதான் உண்மையான செக்யூலரிசம் - நினைவிருக்கட்டும்!

கடவுள் என்ன ஆனார்?

* கேள்வி: குருமூர்த்தி கடவுளுக்குப் பயந்தவரா? மனசாட்சிக்குப் பயந்தவரா?

பதில்: எனக்குக் கடவுளிடம் பக்தி, மன சாட்சியிடம் பயம். இரண்டுக்கும் முரண் இல்லாததால் இரண்டில் எது என்கிற சாய்ஸ் எனக்குக் கிடையாது.

- ‘துக்ளக்', 12.5.2021)

>>           அப்படியா? நீதிபதிகளைக் கேவலமாகப் பேசியது மனசாட்சியோடுதானா? அதன் பிறகு மன்னிப்பு வாங்கியது, மனசாட்சிக்கு விரோதத்தாலா? அப்போது கடவுள் என்ன ஆனார்?

இன்னும் யார் யாரெல்லாம்...

* ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டபோது, பிரபல வக்கீல் பி.ஆர்.வி.சாஸ்திரியை அழைத்து தடையை நீக்க நடவடிக்கை எடுக்கச் சொன்னவர் காஞ்சிப் பெரியவர்.

- குருமூர்த்தி அய்யர், ‘துக்ளக்', 12.5.2021)

>>           காந்தியார் படுகொலையில் இன்னும் யார் யாரெல்லாம் பின்னணியில் இருந்திருக்கிறார்களாம்?

போற்றத்தக்க மனிதநேயம்

* கரோனாவால் மரணம் அடைந்த முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், காவல்துறை அதிகாரிகள், மருந்துக்கடைப் பணியாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் குடும்ப நலனுக்காகமேன்கைண்ட் பார்மா' நிறுவனம் ரூ.100 கோடி நன்கொடை வழங்கிட முன்வந்துள்ளது.

>>           உண்மையிலேயே -இது ஒரு போற்றத்தக்க மனம் - மற்ற மற்ற தொழில் நிறுவனங்களும் முன்கை நீட்டலாமே! நன்கொடைகளையும் நல்கலாமே!

No comments:

Post a Comment