தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 6, 2021

தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்

- தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை, மே 6 உயிர் பயத் தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என தி.மு.. தலை வர் தளபதி மு..ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் தளபதி  மு..ஸ்டாலின் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கோவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகின்றன.

மருத்துவ அவசர நிலை அளவுக்கு கோவிட்-19 தொற்றின் தீவிரம் இருப்பதால், உடனடியாகக் கட்டளை மய்யம் ஒன்றை திறந்திட வேண்டும் என தலைமைச் செயலாளரிடம் கூறியுள் ளேன்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் ஆக்சிஜன் தேவை, இருப்பு, படுக்கைகளின் தேவை, தடுப்பூசி இருப்பு ஆகியவற்றைத் தெரிந்து ஒருங்கிணைந்து செயல்பட இந்த மய்யம் உதவியாக இருக்கும்.

முன்களப்பணியாளர்களின் பங்களிப்பு மாபெரும் மக்கள் சேவையாக மாறிவிட்டது.

மருத்துவ அவசர  நிலைக்காலம் என்பதால் 50 சதவிகித படுக்கைகளை ஒதுக்கீடு செய்து வரும் தனியார் மருத்துவ மனைகள் கூடுதலாகவும் படுக்கைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்

கட்டணத்திலும், முடிந்தளவு சலுகை காட்டுமாறும் கேட்டுக்கொள்கிறேன். ஏழை எளிய மக்களுக்கு மிகுந்த கருணை காட்டி உயிரை செலவில்லாமல் மீட்டுத்தர வேண்டும்.

உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகளும் தம்மை முழுமையாக ஒப் படைக்க வேண்டும். இது கடினமான காலம்; ஆனால் கடக்க முடியாத காலம் அல்ல.

இவ்வாறு  அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரி விக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment