தற்கொலை தீர்வா?
* உசிலம்பட்டியில்
கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அய்வர் தற்கொலை.
>> இதைத் தலையெழுத்து என்று சொல்லப் போகிறார்களா - நாட்டின் பொருளாதார நிலையின் விபரீதம் என்று எழுதப் போகிறார்களா?
இதுதான்
‘இந்து ராஜ்ஜியம்!'
*
உத்தரப்பிரதேசத்தில்
கரோனாவால் மரணித்த நோயாளிகளின் உடல்கள் கங்கையில் வீசப்படுகின்றன.
>> சாமியார் ஆட்சியல்லவா - இன்னும் என்னென்ன வெல்லாம் நடக்குமோ?
வேகம்
- விவேகம்!
*
அத்தியாவசிய
தொழிற்சாலைகள் செயல்படுவதில் இடர்ப்பாடா? 24 மணிநேரமும் தொடர்பு கொள்ள உதவி சேவை மய்யம்.
>> 24 மணிநேரமும் செயல்படுவதுதான் நல்லாட்சி!
நல்ல
சமிக்ஞை!
*
தடுப்பூசி
உற்பத்தியில் இந்தியாவுடன் கூட்டு - அமெரிக்கா விருப்பம்.
>> புதிய அதிபர் ட்ரம்ப் அல்ல!
பணம்
தூங்கி என்ன பயன்?
* கோவில்கள்மூலம்
தினமும் ஒரு லட்சம் பேருக்கு மதிய உணவு - அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு
தகவல்.
>> வடலூர்போல (அணையா நெருப்பு) எப்பொழுதுமே செய்யலாமே!
No comments:
Post a Comment