கைதான ஆசிரியர் ராஜகோபாலனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்
சென்னை, மே 26 மாணவி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை, கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள பத்ம சேஷாத்திரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளிடம் ஆன்-லைன் வழி வகுப்புகள் எடுக்கும் போது பாலியல் தொடர்பான அத்துமீறலில் ஈடுபட்டார்.
பாலியல் தொல்லை தொடர்பான புகாரில் ராஜ கோபாலன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இத னைத் தொடர்ந்து ராஜ கோபாலன் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிடப் பட்டது. அதன்படி சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா, தனியார் பள்ளி தாளாளர் மற்றும் பள்ளி முதல்வர் கீதா ஆகி யோரிடம் விசாரணை நடத்தி னார். இதையடுத்து, பள்ளி நிர்வாகம், அறிக்கையை முதன்மைக் கல்வி அலுவல ரிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையை பள்ளிக்கல்வி ஆணை யருக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அனுப்பி வைத்தார். இதை தொடர்ந்து கல்வி ஆணையர், தமிழக அரசிடம் அந்த அறிக்கையை சமர்ப்பித் ததாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள் ளன.
இதனிடையே இந்த விவ காரம் தொடர்பாக, அளிக்கப் பட்ட புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உள்பட 5 பிரிவுகளில் ஆசிரியர் ராஜகோபாலன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற் றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுன் கீழும் நடவ டிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் மாணவி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி கைதான ஆசிரியர் ராஜகோபாலன் புழல்
சிறையில் அடைக்கப்பட
உள்ளார்.
ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்து ஆஜர்படுத்தப் பட்ட நிலையில் எழும்பூர் நீதி மன்ற நீதிபதி அப்துல் ஃபாருக் இந்த உத்தரவை பிறப்பித்துள் ளார்.
No comments:
Post a Comment