சென்னை, மே 26 சென்னையில் தனி நபர்களுக்கு வீட்டுக் கடன் வழங்கத் திட்டமிட்டுள்ள வங்கிசாரா நிதி நிறுவன மான நவி ஃபின்சர்வ், இதற்கான மொபைல் அப்ளிகேஷனை அடுத்த சில வாரங்களில் அறிமுகம் செய்ய உள்ளது.
மாத சம்பளம் பெறுவோர் மற்றும் சுய தொழில் முனைவோர் எனத் தேர்ந்தெடுத்த இலக்கோடு களமிறங்கும் இந்நிறுவனம் குறைந்த அளவாக 10 லட்ச ரூபாயில் தொடங்கி, அதிகபட்சமாக 1.50 கோடி ரூபாய் வரை வீட்டுக் கடன் வழங்கவும், கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அளவை அதிகபட்சமாக 25 ஆண்டுகள் வரை என நிர்ணயிக்கவும், வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.95% என்ற அளவிலிருந்து தொடங்கவும் திட்ட மிட்டுள்ளது.
இந்நிறுவனம், இந்திய ரிசர்வ் வங்கியிடம் பதிவு பெற்ற வங்கி சாரா நிதி நிறுவனங்களில்
ஒன்றாகும்.
No comments:
Post a Comment