தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தளபதி மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 5, 2021

தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தளபதி மு.க.ஸ்டாலின்


சென்னை,மே5- தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தி.மு.. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் தி.மு.. மட்டும் 125 இடங் களில் வென்று தனிப்பெரும் பான்மை பெற்றது.

கூட்டணி  சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட .தி.மு.., மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 8 உறுப்பினர் களையும் சேர்த்து தி.மு..வுக்கு 133 உறுப்பினர்கள் உள்ளனர். தி.மு.. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. புதிய ஆட் சியை ஏற்படுத்த முறைப்படி சட்ட மன்ற தி.மு.. தலைவரை தேர்வு செய்வ தற்காக, சென்னை அண்ணா அறி வாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்ட சட்டமன்ற தி.மு.. உறுப் பினர்கள் கூட்டம் நேற்று (4.5.2021) மாலை 6 மணி அளவில் நடை பெற்றது. கூட்டத்துக்கு தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் தலைமை தாங் கினார். பொதுச்செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செய லாளர் கே.என். நேரு, துணை பொதுச் செயலாளர்கள் பொன்முடி, அய்.பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. வரவேற்றார்.

இக்கூட்டத்தில்,   திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் முன் மொழிந்திட, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு  வழிமொ ழிந்திட  தி.மு.. சட்டமன்ற கட்சி தலைவராக மு..ஸ்டாலின் அவர் களை, திமுக சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெ டுத்தனர்.  அப்போது அரங்கத்தில் உள்ள அனைவரும் எழுந்து கர வொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

தி.மு.. சட்டமன்ற தலைவராக (முதல்-அமைச்சராக) மு..ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதற் கான கடிதத்தில் சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள 133 புதிய உறுப் பினர்களும் கையெழுத்திட்டனர்.  கூட்டம் முடிந்ததும் மு..ஸ்டாலின் மெரினா கடற் கரையில் உள்ள அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இன்று (5.5.2021) காலை 10.30 மணிக்கு கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகைக்கு திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் சென்றார். அவருடன் திமுக பொதுச் செய லாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செய லாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகி யோரும் சென்றனர். அங்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் சந்தித் தார். அப்போது அவர் சட்டமன்ற கட்சி தலைவராக சட்டமன்ற உறுப்பினர் களால் தேர்ந்தெடுக் கப்பட்டதற்கான கடிதத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திடம் வழங்கினார்.

ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரினார். இதை ஆளுநர் பன்வாரிலால் ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து ஆளுநர் பன் வாரிலால் புரோகித், தளபதி மு.. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து வழங்கினார். ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஏற் பாடுகளை செய்வதாக கூறினார். பின்னர் அங்கு மு..ஸ்டாலின் உள் ளிட்ட அனைவருக்கும் ஆளுநர் தேநீர் வழங்கினார்.

நாளை மறுநாள் 7ஆம் தேதி முதல்-அமைச்சராக பதவி ஏற்க விரும்புவதாக மு..ஸ்டாலின் தெரிவித்தார். கிண்டி ஆளுநர் மாளி கையில் பதவி ஏற்பு விழாவை வைத்துக் கொள்ளலாம் என்றும் விருப்பம் தெரிவித்தார்.

இதையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக் கொண்டார்.

ஆட்சி அமைக்க ஆளுநர் முறைப் படி அழைப்பு விடுத்ததும் அமைச் சரவை பட்டியலை நாளை மு.. ஸ்டாலின் ஆளுநர் பன் வாரிலால் புரோகித்திடம் வழங் குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக ஆளுநரை மு..ஸ்டாலின் இன்று சந்தித்ததைத் தொடர்ந்து கிண்டி ஆளுநர் மாளிகை வளாகத் தில் உள்ள திறந்த புல்வெளி மைதானத்தில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும் முரமாக நடந்து வருகின்றன. அங்கு சுமார் 200 பேர் அமரும் வகையில் பதவி ஏற்பு விழா நிகழ்ச்சிகள் எளிமையான முறை யில் நடைபெறுகிறது.

பதவி ஏற்பு விழாவில் பங்கேற்கும் அனைவரும் கரோனா பரிசோ தனை செய்திருக்க வேண்டும் என அறிவிக் கப்பட்டுள்ளது. இதை யொட்டி விழாவில் பங்கேற்க வரும் அனைவருக்கும் இன்று கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.


No comments:

Post a Comment